For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர் ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடம்... போராடுகிறோம் - பதிவை போட்டு நீக்கிய சங்கீதா ரெட்டி

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது அவரது உயிரைக்காக்க போராடுகிறோம் என்று அப்பல்லோ மருத்துவமனையின் செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டி டுவிட்டரில் பதிவிட்டு அதை உடனடியாக நீக்கினா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென்று தீவிர மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து முதல்வரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அவருக்கு எக்மோ சிஸ்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அப்பல்லோ அறிக்கை வெளியிட்டது. முதல்வரின் உடல்நிலையைச் சிறப்பு மருத்துவக்குழுவினர் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

CM remains in a grave situation... says Sangita Reddy

இந்த அறிக்கை அதிமுக தொண்டர்கள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல்கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மத்தியில் கவலை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடம் என்பதை நேற்று இரவு வந்த அப்பல்லோ ட்விட்டும், அப்பல்லோ மருத்துவமனை இயக்குநர் சங்கிதா ரெட்டியின் ட்விட்டும் உறுதிப்படுத்தியது.

சங்கீதா ரெட்டி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள இதய அடைப்பை சரி செய்யும் முயற்சி 18 மணி நேரத்தையும் கடந்து தொடர்ந்துவரும் நிலையில், இன்று அதிகாலை 2.38 மணிக்கு மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சங்கிதா ரெட்டி, ஜெயலலிதாவை முடிந்த வரை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.

13வது அறிக்கை

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்களால் அப்பல்லோ மருத்துவமனை சூழப்பட்டுள்ளது
இந்த நிலையில் இன்று மதியம் ஒருமணியளவில் வெளியான 13வது அறிக்கையில் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து, மோசமாக உள்ளது என குறிப்பிட்டது. ஜெயலலிதாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்றும், அவர் தொடர்ந்து மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், எக்மோ என்று சொல்லக் கூடிய செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.

கவலைக்கிடம் பதிவை நீக்கிய சங்கீதா ரெட்டி

இதைத் தொடர்ந்து நிர்வாக துணை இயக்குநர் சங்கீதா ரெட்டி பதிவிட்டுள்ள டுவிட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவரது உயிரைக் காப்பாற்ற மிகவும் போராடி வருகிறோம் என்று பதிவிட்டார் சங்கீதா ரெட்டி. இது அதிமுக தொண்டர்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் அந்த பதிவை உடனடியாக நீக்கினார் சங்கீதா ரெட்டி.

நீக்காத அப்பல்லோ

ஆனால் அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்து சங்கீதா ரெட்டியின் ட்விட்டர் பதிவை நீக்காமல் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Despite our best efforts, our beloved CM remains in a grave situation said apollo hospital Sangita reddy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X