கூவத்தூரிலிருந்து தப்பியது குத்தமாய்யா? அருண்குமார் பதவி அம்போன்னு போச்சு.. டிடிவி தினகரன் நடவடிக்கை

காஞ்சிபுரம் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்து அங்கிருந்து தப்பியோடிய கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ-வும் கோவை மாநகர் அதிமுக செயலாளருமான அருண்குமார் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமாரை கோவை அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அதிமுக துணை பொதுச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பின்னர் அதிமுகவில் இரு அணிகளாக பிளவுப்பட்டது. அதில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்தது. சட்டசடபை குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் எம்எல்ஏ-க்களை திமுகவோ அல்லது ஓபிஎஸ் அணியினரோ விலை பேசக் கூடும் என்பதால் அவர்களை கூவத்தூரில் உள்ள ரிசார்டில் தங்க வைத்தனர். அவர்கள் ரிசார்டை விட்டு வெ்ளியேறாமல் இருக்க அந்த இடத்தை சுற்றி குண்டர்களை ஈடுபடுத்தினர்.

தாய்க்கு உடல்நலம் சரியில்லை

சசிகலா தரப்புக்கு ஆதரவளிக்க விரும்பாத கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார், தனது தாய்க்கு நலம் சரியில்லை என்று காரணம் கூறிவிட்டு கூவத்தூரி்ல் இருந்து தப்பி கோவை சென்றார்.

சொத்துக்குவிப்பு

சசிகலா எனும் நானும்... என்கிற வார்த்தையை மனதுக்குள் கூறி சந்தோஷப்பட்ட சசிகலாவுக்கு பேரடியானது சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இதனால் ஏமாற்றமடைந்த சசிகலா பெங்களூர் சிறை செல்ல நேரிட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு

சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அருண்குமார் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் திடீரென 13-ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்து அந்த அணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

டிடிவி தினகரன் அதிரடி

இந்நிலையில் கட்சிகளின் விதிகளை மீறி ஓ.பன்னீர் செல்வத்தின் அணிக்கு ஆதரவு தெரிவித்த அருண்குமார், கோவை மாநகர் அதிமுக செயலாளர் பதவியில் இருந்து இன்று நீக்கப்பட்டார்.

English summary
Coimbatore North MLA Arunkumar has been removed from ADMK Coimbatore District Secretary, orders TTV Dhinakaran.
Please Wait while comments are loading...