இந்து முன்னணி பிரமுகர் கொலை.. கோவையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது - டிஜிபி பேட்டி

கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்டதையடுத்து தற்போது  கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார்.

கோவை அருகே சுப்பிரமணியபாளையத்தை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் (35), வியாழக்கிழமை இரவு சிலரால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore and Tirupur districts, law and order is under control - DGP

இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கோவை நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுனர்.

கோவை, திருப்பூர், மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனையடுத்து கலவரப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே டிஜிபி டிகே ராஜேந்திரன் அளித்துள்ள பேட்டியில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை. சட்டம் ஒழுங்கு 100 சதவிதம் கட்டுக்குள் உள்ளது என்று கூறிஉள்ளார்.

English summary
Coimbatore and Tirupur districts, law and order is under control, says police DGP T.K. Rajendran
Please Wait while comments are loading...

Videos