For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலூர் பேராசிரியைக்கு ஆதரவாக சென்னை செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் போராட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: இடமாற்றம் செய்யப்பட்ட கல்லூரி பேராசிரியை சாந்தியை, மீண்டும் அதே கல்லூரியில் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில், சுமார் 3,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மாணவ, மாணவியரின் தேர்வு கட்டணத்தை உயர்த்தியது. இதை கண்டித்து, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் இதன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மாணவியர், கடந்த மாதம் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்வு கட்டணத்தை பல்கலைக்கழகம் குறைத்தது.

College students protests for professor

தேர்வு கட்டணத்தை குறைப்பதற்கு, மாணவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட சிண்டிகேட் உறுப்பினரும், கடலூர் கே.என்.சி., கல்லூரி பேராசிரியருமான சாந்தி, சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட காஞ்சிபுரம் பச்சையப்பா கல்லூரிக்கு மாற்றப்பட்டார். இதை கண்டித்தும், அவரை மீண்டும் கடலூர் கல்லூரியில் பணியமர்த்தக்கோரியும், நேற்று காலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில், வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்து, பேராசிரியை இட மாற்றம் செய்ததை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

College students protests for professor

இந்நிலையில், இன்று சென்னை செல்லம்மாள் பெண்கள் கல்லூரி மாணவிகள் இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கைகளில் ‘தமிழக அரசே கடலூர் கே.என்.சி. பேராசிரியர் சாந்தி மீதான பழிவாங்கல் நடவடிக்கையைத் திரும்பப் பெறு' என்ற அட்டைகளை ஏந்தியபடி அமர்ந்திருந்தனர்.

English summary
The Chennai chellammal women college students staged a protest against the action taken on a professor
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X