For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆணையில்தான் காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது: டி.ராஜா

சென்னையில் நடத்தப்பட்ட காவல்துறை தடியடிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். யாருடைய ஏவுதலின் பேரில் காவல்துறை தாக்குதல் நடத்தியது என்றும் அவர் கேள்வி எழு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காவல்துறையினர் நேற்று தடியடி நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆணையின் பேரில்தான் தடியடி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை மெரினா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி நேற்று கலைத்தனர். இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் போர்க்களம் போல் காட்சியளித்தது.

Communist party national secretary D.Raja condemns for police lahti charge on protesters

இந்நிலையில் காவல்துறையின் தடியடி செயலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதி காப்பது என்ற பெயரில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்று அவர் கூறினார்.

அடக்குமுறை தாக்குதலை தமிழக அரசு நிறுத்திக் கொள்ளவேண்டும் என டி.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாருடைய ஏவுதலின் பேரில் காவல்துறை இப்படி செயல்பட்டது என்று டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆணை பிறப்பித்துதான் காவல் துறை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தேசிய செயலர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

English summary
Communist party national secretary D.Raja condemns for police lahti charge on protesters. He accuses that somebody who is in power with their order only police used batons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X