For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸார் தடுத்தபோது கம்பி பட்டு காங். எம்.எல்.ஏக்கள் விஜயதாரணி, அண்ணாதுரை காயம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது போலீசார் தடுத்ததில் இரும்புக்குழாய் தாக்கி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி மற்றும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ அண்ணாதுரை ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு உருவாகியுள்ளது.

சட்டசபையில் இன்று குடிநீர் பிரச்சினை மீதான கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் வேலுமணி பதில் சொல்லி முடித்தார். அப்போது மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் திடீரென எழுந்து மத்திய அரசுக்கு எதிரான துண்டு காகிதங்களை காண்பித்தனர். அதில் மத்திய அரசே விவசாயிகளின் மானியங்களை வெட்டாதே என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

எம்.எல்.ஏக்கள் கோரிக்கை

எம்.எல்.ஏக்கள் கோரிக்கை

இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பா.ம.க. உறுப்பினர்கள் ஆகியோரும் எழுந்து பேச முற்பட்டனர். நாடு தழுவிய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தத்தை ஆதரித்து தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தினர்.

அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு

ஆனால் சபாநாயகர் பேச அனுமதி கொடுக்கவில்லை. மத்திய அரசை கண்டித்து வாசகங்கள் காட்டியதற்காக எச்சரிக்கை செய்தார். உறுப்பினர்கள் நடந்து கொள்வது விதிமுறைகளுக்கு மாறானது. இதுமுறையல்ல என்றார்.

எதிர்கட்சியினர் முழக்கம்

எதிர்கட்சியினர் முழக்கம்

உடனே கம்யூனிஸ்டு, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்கள் தலைமை செயலக வெளிவாசல் வழியாக மெயின் ரோட்டுக்கு மறியலில் ஈடுபட வேகமாக சென்றனர்.

தடுத்த காவலர்கள்

தடுத்த காவலர்கள்

இதனையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் தடுப்பு கம்பிகளை வைத்து அவர்களை மெயின் ரோட்டுக்கு செல்ல விடாமல் தடுத்தனர்.வாகனங்களை நிறுத்த உபயோகப்படுத்தப்படும் இரும்பு குழாயையும் கயிறு மூலம் வேகமாக இறக்கினார்கள்.

எம்.எல்ஏக்கள் தலையில் காயம்

எம்.எல்ஏக்கள் தலையில் காயம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. அண்ணாதுரை ஆகியோர் தலையில் இந்த கம்பிகள் இடித்தது. இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனயைடுத்து அங்கு பதற்றம் உருவானது. இதனால் அவர்கள் ஆவேசம் அடைந்தனர். போலீசார் அவர்களை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்ததால் வழியிலேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பேச வாய்ப்பு மறுப்பு

பேச வாய்ப்பு மறுப்பு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சவுந்தர்ராஜன் எம்.எல்.ஏ., நாடு தழுவிய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தத்தை ஆதரித்து சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தினோம். ஆனால் எங்களுக்கு பேச வாய்ப்பு தரவில்லை. இதனால் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து மறியலில் ஈடுபட்டோம் என்றார்.

விஜயதரணி, எம்.எல்.ஏ.

விஜயதரணி, எம்.எல்.ஏ.

சாலை பாதுகாப்பு மசோதா உள்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில் மத்திய அரசுக்கு மாநில அரசு துணை போகிறது இதனால் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற அனுமதி கேட்டோம். அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வெளிநடப்பு செய்துள்ளோம் என்று விஜயதாரணி எம்.எல்.ஏ தெரிவித்தார்.

தாக்கிய இரும்புக்குழாய்கள்

தாக்கிய இரும்புக்குழாய்கள்

சாலை மறியலில் ஈடுபட சென்ற போது போலீசார் அராஜக போக்குடன் நடந்து கொண்டனர். வாகனங்களை நிறுத்த பயன்படுத்தும் இரும்பு குழாயை கொண்டு தடுத்தார்கள். இதில் நான் உள்பட சில எம்.எல்.ஏ.க்கள் காயம் அடைந்தோம் என்றும் கூறினார். தொடர்ந்து அவர் அங்கு நின்ற போலீசாருடன் விஜயதரணி எம்.எல்.ஏ. கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

விஜயதாரணி வாக்குவாதம்

விஜயதாரணி வாக்குவாதம்

எங்கள் தலையில் காயம் ஏற்பட்டதற்கு காரணமான போலீசார் யார்? அவருக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? என்று சரமாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் போலீஸ் அதிகாரிகள் மவுனமாக இருந்தனர். சட்டசபை வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
Congress MLA Vijayadharani and CPI MLA Annadurai were injured in an attack by police in the assembly lobby today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X