ஸ்ரீரங்கம் கோவில் முன்பாக பிச்சையெடுக்கிறார் பெரியார்..எஸ்.வி.சேகர் பதிவால் ட்விட்டரில் பஞ்சாயத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீரங்கம் கோவில் முன்பாக பிச்சையெடுக்கிறார் பெரியார் என பாஜகவின் நடிகர் எஸ்.வி. சேகர் போட்ட பதிவால் ட்விட்டரில் சர்ச்சை வெடித்துள்ளது.

எஸ்.வி. சேகர் இன்று தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு மீம் படத்தை பதிவிட்டுள்ளார். அதில் 'கேள்வி: ஸ்ரீரங்கம் கோவில் முன்பு ராமசாமி சிலை இருப்பதை பற்றி உங்கள் கருத்து?? என ஒரு கேள்வி கேட்கப்பட்டு, பதிலாக, கோவில் என்று இருந்தால் அதன் முன்பு பிச்சைக்காரர்கள் இருப்பது வழக்கம் தானே?? அதைப்பற்றி நாம் ஏன் பேச வேண்டும் என வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

அவரது இந்த பதிவுக்கு அவரது ட்விட்டர் பக்கத்திலேயே மிகக் கடுமையான பதில்கள் தரப்பட்டு வருகின்றன. ஃபேஸ்பு உள்ளிட்ட இதர சமூக வலைதளங்களிலும் எஸ்.வி. சேகரின் பதிவுக்கு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Perarivalan’s mother Arputham Ammal has thanked Tamilnadu MLAs - Oneindia Tamil

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A controversy erupted over the Actor SVe Shekar's tweet on Thanthai Periyar