சசி ஆதரவு சென்னை கமிஷனர் ஜார்ஜ் மாற்றம்?.. அவருக்குப் பதில் சஞ்சய் அரோரா??.. ஓ.பி.எஸ். அதிரடி!

சசிகலா ஆதரவாளராக சந்தேகிக்கப்படும் சென்னை போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் மாற்றப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வராக துடிக்கும் சசிகலா ஆதரவாளராக சந்தேகிக்கப்படும் ஜார்ஜ், சென்னை போலீஸ் கமிஷ்னர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் இன்று காலை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பின் போது சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்ஜை மாற்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

COP Chennai George likely to be sack?

ஜார்ஜ்-க்கு பதிலாக சஞ்சய் அரோரா சென்னை போலீஸ் கமிஷ்னராக நியமிக்கப்பட்ட உள்ளதாகவும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மெரினா புரட்சியின் போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் சசிகலா கோஷ்டியின் உத்தரவின் பேரில் கமிஷ்னர் ஜார்ஜ்தான் கொடூர வன்முறைகளை கட்டவிழ்த்துவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அசாதாரண சூழல் நிலவும் நிலையில் ஜார்ஜ் தொடர்ந்து கமிஷ்னராக நீடிப்பதை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விரும்பவில்லை என்பதால் அவர் உடனடியாக மாற்றப்படுகிறார் எனவும் கூறப்படுகிறது.

COP Chennai George likely to be sack?

English summary
Sources said that Chennai Police Commissioner Geroge likley to be sacked.
Please Wait while comments are loading...