For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விழுப்புரம் பேராசிரியை மாணவனுடன் திருமணம் – மேஜர் என்பதால் சேர்ந்து வாழ கோர்ட் அனுமதி!!

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரத்தில் கல்லூரி பேராசிரியை மாணவனுடன் ஓட்டம் பிடித்ததுடன் திருமணமும் செய்துகொண்டு எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். இருவரும் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ நீதிமன்றமும் அனுமதித்துள்ளது.

விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் ரம்யா. எம்ஏ எம்பில் முடித்துவிட்டு விழுப்புரம் அருகே உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

Court agreed student-lecturer marriage

கடந்த 29 ஆம் தேதி ரம்யா திடீரென்று மாயமானர். இது குறித்து விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ரம்யாவின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் சென்று விசாரித்தபோது அதே கல்லூரியில் பிபிஏ 3 ஆம் ஆண்டு படிக்கும் விழுப்புரத்தை சேர்ந்த மாணவன் சதீஷ்குமார் என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது.

இந்நிலையில் இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

பின்னர் போலீசார் ரம்யாவை நீதிபதி வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். அப்போது அவர் தனது சுயவிருப்பத்தின்பேரில் சதீஷுடன் சென்றதாகவும், சட்டப்படிதிருமண வயது தங்களுக்கு உள்ளதால் நாங்கள் திருமணம்செய்துகொண்டாக தெரிவித்தார்.

இதனைகேட்ட நீதிபதி அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று உத்தரவிட்டு அவர்களை அனுப்பிவைத்தார்.

English summary
Vilupuram College Lecturer married a student and court agreed their marriage due to both is major.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X