For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வரும் 22ம்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிகர நிகழ்ச்சியாக மகிசாசூரனை, முத்தாரம்மன் வதம் செய்யும் மகிசாசூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Dasara festival begins on Today

முன்னதாக அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து நேர்த்திக் கடன் செலுத்த இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை கடைபிடிக்க தொடங்கினர்.

மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அம்மன் வீதிஉலாவும் நடக்கிறது. விழாவையெட்டி தினமும் கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

Dasara festival begins on Today

தசரா திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு துர்க்கை திருக்கோலத்தில் சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா புறப்பாடு நடக்கிறது.

2ம் திருநாள் இரவில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலாவும், 3ம் நாள் இரவில் பார்வதி திருக்கோலத்திலும், 4ம் திருநாளில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 5ம் திருநாளில் நவநீத கிருஷ்ணர் கோலத்திலும், 6ம் திருநாளில் மகிசாசூரமர்த்தினி திருக்கோலத்திலும், 7ம் திருநாளில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8ம் திருநாளில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 9ம் திருநாள் இரவில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது.10ம் திருநாளான வருகிற 22ம்தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவில் முன்பாக எழுந்தருளுகிறார். அப்போது, சிகர நிகழ்ச்சியாக மகிசாசூரனை, முத்தாரம்மன் வதம் செய்யும் மகிசாசூரசம்ஹாரம் நடக்கிறது.

Dasara festival begins on Today

இந்தியாவில் மைசூரில்தான் தசரா விழா கோலாகலமாக நடைபெறும். அதற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் தான் அதே போன்று பெரிய அளவில் தசரா விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The famous Dasara festival, which symbolises victory of good over the evil, began with flag hoisting at the Mutharamman Temple at Kulasekarapatnam on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X