வதந்திகளுக்கு பின்னால் சசிகலாவின் குடும்பம்.. தீபா பரபர குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வதந்திகளுக்கு பின்னால் சசிகலா குடும்பம் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயலாளர் தீபா கூறியுள்ளார்.

சென்னை தி.நகரில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தேவையில்லாத வதந்திகளை சிலர் பரப்புகின்றனர். வதந்திகளுக்கு பின்னால் சசிகலா குடும்பம் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 Deepa Accusation on sasikla's family

பேரவையில் அதிமுக தொண்டர்கள் இணைந்து விடுவார்கள் என அச்சப்படுகின்றனர். எனக்கு எந்த குழப்பமும் கிடையாது. திடீரென என் கணவர் கட்சி தொடங்குவதாக கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதை சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை. எனது கணவர் மாதவனை பின்னால் இருந்து சிலர் இயக்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
jayalalithaa's nice deepa Accusation on sasikla's family
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்