தீபாவின் இலக்கு 50 லட்சமாம்.. அடேங்கப்பா!!

ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று புதிய அரசியல் அமைப்பை தொடங்கிய தீபாவின் இலக்கு 50 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தொடங்கப்பட்ட எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவைக்கு 50 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதே தனது லட்சியம் என்று பேரவை தலைவர் தீபா கூறியுள்ளர்.

கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி எம்ஜிஆர்- அம்மா தீபா பேரவை என்ற புதிய அரசியல் அமைப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கினார்.

மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றிய நிர்வாகிகளை நியமிக்க 27 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை தீபா அமைத்துள்ளார். அவர்கள் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து மாவட்ட செயலாளரை தேர்ந்தெடுப்பது குறித்து தீபாவுக்கு பரிந்துரைப்பார்கள்.

நிர்வாகிகள் நியமனம்

பின்னர் மாவட்டச் செயலாளர்கள் அந்தந்த மாவட்டத்துக்கு நகரம், ஒன்றிய, கிளைச் செயலாளர்களை நியமிப்பார். பேரவை தொடங்கி 15 நாட்களுக்குப் பின் அதிகாரப்பூர்வ உறுப்பினர் படிவத்தை தீபா கடந்த 12-ஆம் தேதி வழங்கினார்.

10 ரூபய் கொடுத்து

தீபா வீட்டு முன்பு உள்ள அலுவலகத்தில் உறுப்பினர் படிவம் வழங்கப்படுகிறது. படிவம் ஒன்று ரூ.10 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

 

 

நல்ல வருமானம்

அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் நேரில் வந்து ஆயிரக்கணக்கில் உறுப்பினர் படிவத்தை பெற்றுச்செல்கின்றனர். இதன் மூலம் தீபா பேரவைக்கு ரூ.7 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

 

 

டார்கெட் ஜாஸ்திதான்!

த மிழகம் முழுவதும் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க தீபா இலக்கு நிர்ணயித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன் மாவட்டச் செயலாளர்களை நியமிக்க தீபா திட்டமிட்டுள்ளார்.

 

 

English summary
Deepa aims to increase the strength of her peravai to be 50 Lakhs members throughout Tamil nadu.
Please Wait while comments are loading...