3 மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு ஏழரைக்கு வந்தா எப்படி தீபா??

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் ஆரம்பமே ஏகப்பட்ட சறுக்கல்களாக உள்ளது. தொடர்ந்து சொதப்பி வருகிறார் தீபா. நேற்று கூட தனது அமைப்பின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு லேட்டாக வந்ததால் கடுப்பாகிப் போனார்கள் அவரது தொண்டர்கள்.

"மேட் பேரவை" என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் தீபா பேரவை சார்பில் தீபா, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த அமைப்பின் சார்பில் நேற்று முதல் ஆலோசனைக் கூட்டம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் முதல் ஆலோசனைக் கூட்டமே தள்ளு முள்ளில் முடிந்ததால் தீபா அப்செட்டாகிப் போனார். ஆனால் தள்ளுமுள்ளுக்குக் காரணமே அவர்தான்.

ஆலோசனை

ஆலோசனை

ஆர்கே நகர் தொகுதி புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தீபா தலைமையில் பேரவை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பெரும் கூட்டம்

பெரும் கூட்டம்

சும்மா சொல்லக் கூடாது. நல்ல கூட்டம்தான். நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இதை தீபாவே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

பிகினிங் சரியில்லையேம்மா

பிகினிங் சரியில்லையேம்மா

முதலில் தீபா 3 மணிக்கு வருவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் 5 மணிநேரம் தாமதமாக வந்தார். இரவு 7.30 மணிக்குதான் கூட்டமே தொடங்கியது.

கடுப்பான தொண்டர்கள்

கடுப்பான தொண்டர்கள்

தீபா இப்படி பல மணி நேரம் தாமதமாக வந்ததால் காத்திருந்த தொண்டர்கள் கடுப்பாகிப் போனார்கள். நெளிந்தனர். தீபா வந்தபோது அவரை நோக்கி அனைவரும் சென்றனர். போலீஸார் தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இப்படியா நடந்து கொள்வது

இப்படியா நடந்து கொள்வது

தீபா தாமதமாக வருவது என்பது புதிதில்லை. அவர் பிரஸ் மீட் வைத்தாலும் கூட பல மணி நேரம் காத்திருக்க வைத்த பின்னர்தான் செய்தியாளர்களச் சந்திக்கிறார். அதேபோலதான் தொண்டர்களையும் காக்க வைத்து வருகிறார். ஆனானப்பட்ட பெரும் பெரும் தலைவர்களே சரியாக டைமிங்கை பாலோ செய்யும்போது தீபாவுக்கு என்ன வந்தது.. இது கூடவா அவருக்குத் தெரியாது என்று தொண்டர்கள் கேட்கிறார்கள்.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
MADP leader Deepa is making the cadres irritated by coming late to the RK Nagar meeting yesterday.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்