For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்க பாட்டி சொத்து.. ஜெ. வாழ்ந்த வீடு.. போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற விடமாட்டேன்.. தீபா ஆவேசம்

நாங்கள் ஓடி விளையாடிய எங்கள் பாட்டி சொத்தான போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்றுவதா என தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா இறந்த பிறகு முறையாக படத்திறப்பு விழா கூட நடத்தாத சசிகலாவின் அடிமைகள் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றப் போட்டுள்ள தீர்மான ஏமாற்று நாடகம் என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிறுவனர் தீபா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சசிகலா பினாமி எடுபுடி அரசு நம்முடைய புரட்சித் தலைவி அம்மா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை திடீர் ஞானோதயமாக நினைவு இல்லமாக மாற்றப் போவாதாக அமைச்சரவை கூடிக் தீர்மானம் நிறைவேற்றிருப்பது.

தொண்டர்களை ஏமாற்ற எடுபுடி அரசு செய்த போலி ஏமாற்று நாடகமாகும். அம்மாவின் மறைவிற்குப் பின்னால் சசிகலா கூட்டத்தினரின் ஊழல்கள் வெட்ட வெளிச்சமாகியுள்ள சூழ்நிலையில் மக்கள் மத்தியில் மரியாதை இழந்து நடைப் பிணமாக காட்சி தோன்றும் கபோதி கூட்டத்தினர் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற முடியாதா? என்ற நப்பாசையில் அம்மாவின் தொண்டர்களை ஏமாற்றவும் திசை திருப்பவும் செய்த பொய் வேடமே நினைவு இல்ல நாடகமாகும். அம்மாவின் சமாதியை இதுவரை கட்ட முயற்சி செய்யாத ஊழல் பெருச்சாளிகள் அம்மா மறைந்து 6 மாதம் ஆகியும் தலைமைக் கழகத்தின் சார்பில் படத்திறப்பு நிகழ்ச்சி கூட நடத்த முன்வராத பச்சோந்தி கூட்டம் நினைவு இல்லம் பற்றி தீர்மானம் நிறைவேற்ற என்ன யோக்கியதை இருக்கிறது?

ஓடி விளையாடிய வீடு

ஓடி விளையாடிய வீடு

நேற்று தீர்மானம் நிறைவேற்றிய சசிகலாவின் அடிமைகளின் கூடாரம் எத்தனை இடங்களில் படத்திறப்பு நிகழ்ச்சி நடத்தினார்கள். அம்மா அவர்களுக்கு சிலைகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்? அம்மாவின் சமாதியை, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளதால் கடற்கரையில் இருக்க கூடாது என்று எதிர்க்கட்சிகள் கூவியபோதும் அரசு அலுவலகங்களில் அம்மாவின் படம் இருக்க கூடாது என்று எதிரிகள் கூக்குரல்யிட்ட போதும் அவர்களை எதிர்த்து பேசாமல் மௌனச் சாமியார்களாக இருந்த ஊழல் அமைச்சரவை கூட்டம் தீர்மானத்தை தொண்டர்களும்,நாட்டுமக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.எனது பாட்டிகாலத்தில் நாங்கள் அத்தையுடன் ஓடி விளையாடிய எங்கள் பூர்வீக இல்லத்தை இடையிலே சதிகாரர்களால் பிரித்து வைக்கப் பட்டோம்.

போயஸ் தோட்டத்தை அபகரிப்பதா?

போயஸ் தோட்டத்தை அபகரிப்பதா?

தற்போது ஓபிஎஸ்,இபிஎஸ் இரு அணிகளின் போலி வேடதாரிகளை அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அடையாளம் கண்டு எனது தலைமையில் இலட்சக்கணக்கானத் தொண்டர்கள் எழிச்சியோடும், உணர்ச்சியோடும் செயல்பட்டு வருவதை சகிக்க முடியாத அடிமைகள் கூட்டம் என் வளர்ச்சியைத் தடுப்பதற்காக நினைவு இல்ல நாடகத்தை அரங்கேற்ற எத்தனைக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை அம்மா வாழ்ந்த இல்லத்தை கோவிலாக கருதுகிறேன். தற்போது மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டம் என் அத்தையை வஞ்சித்தக் கூட்டம், வஞ்சர்கள் கூட்டம். ஊழல் கறைபடிந்த கூட்டம், நினைவு இல்லம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தை அபகரிக்க தீய திட்டம் தீட்டியுள்ளார்கள்.

தவறுகளை மறைக்க..

தவறுகளை மறைக்க..

அம்மாவின் இரத்த வாரிசான என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு வன்மமாய் என் அத்தையிடமிருந்து எல்லாவற்றையும் அபகரித்தவர்கள் மிக மிக கொடூர கிராதகர்களாய் என்னிடம் இருந்து என் தாயை போன்ற அத்தையை அபகரித்தவர்கள் மக்களால் நான் மக்களுக்கவே நான் என்று வாழ்ந்த தியாகத் தலைவியை மக்களால் காண முடியாமல் செய்தவர்கள் இன்று இல்லத்தைக் காட்டி அனுதாபம் தேடி தங்களுடைய தவறுகளை மறைக்க பார்க்கிறார்கள்.

முறைகேடு

முறைகேடு

அத்தைக்காக நான் அவர்கள் வழியில் மக்களுக்காக பணியாற்றுவேன். நானும் என் சகோதரர் தீபக்கும் மட்டும் தான் அணைத்து சொத்துக்களுக்கும் முறையான சட்டப்பூர்வமான வாரிசு எங்களிடம் முறையாகவோ சட்டரீதியாகவோ அனுமதி பெறாமல் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவது சட்டரீதியான மற்றும் தார்மிகரீதியான முறைகேடாகும்.

எங்களுக்குத்தான் சொந்தம்

எங்களுக்குத்தான் சொந்தம்

நான் பிறந்த எனது தாய் இல்லம் என் அத்தைக்காக இறுதிவரை என்னால் மட்டும் தான் பராமரித்து அத்தையின் புகழை மேம்படுத்திட. உயில் என் அத்தைக்கு சொந்தமான, அனைத்து பூர்விக சொத்துக்கள் அதனை முறைப்படி பராமரிக்கும் உரிமை முழுமையாக எனக்கும் சகோதரர் தீபக்கும் மட்டும் உள்ளது, பிறகு வரும் காலங்களில் முறையாக அஇஅதிமுகவின் கோட்டையாக அந்த புனித இல்லத்தை கட்டி காப்பது எனது கடமையாகும். தற்போது உள்ள அதிமுக சசிகலா பினாமி அமைச்சரவைக்கு இந்த நடவடிக்கை எடுக்கும் உரிமை எந்த அடிப்படையில் உள்ளது.

இவர்கள் யார்?

இவர்கள் யார்?

இதையெல்லாம் முடிவு செய்ய இவர்கள் யார்? இதை மீறி சசிகலா மற்றும் நடராஜன் இந்த கபட நாடகத்தை நிகழ்த்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நான் தயாராக உள்ளேன். முதலில் இந்த பினாமி அமைச்சரவை அடிமை ஆட்சி நடத்துவதை நிறுத்திவிட்டு அம்மாவுக்காக வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்கள் கடமையை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

கூட்டு சதி

கூட்டு சதி

திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் திருநாவுக்கரசு தலைமையிலான காங்கிரஸுடன் சசிகலா கணவர் நடராஜன் நெருங்கிய நண்பர். இவர்களின் கூட்டு சதியால் மறைமுகமாக திமுகவுடன் சேர்ந்து அதிமுகவை அடியோடு அழிக்க வேண்டும் என்ற சதி வலையை பின்னி வருகிறார்கள். அம்மா அவர்கள் வாசித்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்கி காலி செய்து அதன் மூலமாக அதிமுகவின் கோட்டை என்பதை மக்கள் மறந்திட தீட்டும் கபட நாடகம்.

எதிராக சதி

எதிராக சதி

இந்த சதியினை முறியடிக்க அதிமுக தொண்டர்கள் உடனடியாக குரல் எழுப்ப வேண்டும். உண்மையான அதிமுக வின் லட்சிய தொண்டர்கள் விருப்பம் இதுவல்ல என்பதுதான் உண்மை.

சசிகலாவின் கைக் கூலிகள்

சசிகலாவின் கைக் கூலிகள்

எடப்பாடி பழனிசாமி போன்ற சசிகலாவின் கைக்கூலிகள் எங்களுக்கு சொந்தமான தார்மிக உரிமைகளை பறிக்க நினைப்பதை அதிமுகவின் உண்மை தொண்டர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். அம்மாவிற்கு துரோகம் இழைக்காதீர்கள் அம்மா அவர்கள் இந்த வழக்கில் இருந்து முழுமையாக அவர் இறந்த பிறகு உச்ச நீதி மன்றத்தால் விடுவிக்க பட்டார் அதனால் 100 கோடி அபராதம் கட்ட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொய் பிரச்சாரம்

பொய் பிரச்சாரம்

66 கோடி முறைகேடான சொத்து குவிப்பு வழக்கு பட்டியலில் போயஸ் தோட்ட இல்லம் இடம் பெற வில்லை. தவறான செய்தியாக தமிழக அரசு ஏலத்தில் வீட்டை எடுத்து நினைவில்லமாக மாற்ற சசிகலாவின் பினாமி அரசின் சூழ்ச்சியான தவறான முழுக்க முழுக்க அயோக்கியர்களின் பொய் பிரச்சாரமாகும். இவ்வாறு தீபா கூறியுள்ளார்.

English summary
Deepa peravai founder Deepa opposed Poes Garden becomes memorial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X