ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சேவல் சின்னத்தை பெற்றே தீருவேன்...சவால்விடும் தீபா

ஆர்கே நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் தாம் சேவல் சின்னத்தை எப்படியும் பெற்றே தீருவேன் என சவால்விட்டிருக்கிறாராம் தீபா.

By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் தீபா, தேர்தல் ஆணையத்திடம் இருந்து சேவல் சின்னத்தை பெற்றே தீருவேன் என அடம்பிடித்து வருகிறாராம்.

ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறுகிறது. இதில் ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு தாமே எனக் கூறி களமிறங்கியுள்ளார் எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை பொதுச்செயலர் தீபா.

சேவல் சின்னம்

சுயேட்சையாக போட்டியிடும் தீபா, சேவல் சின்னத்தை பெறுவதற்கு முயற்சிக்கிறாராம். 1989-ல் அதிமுக உடைந்தபோது சேவல் சின்னத்தில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார்.

தேர்தல் ஆணையம் தடை

அந்த சென்டிமென்ட் அடிப்படையில் சேவல் சின்னத்தை கேட்கிறார் தீபா. ஆனால் 1989-ம் ஆண்டுக்குப் பின்னர் தேர்தல் சின்னங்களாக விலங்குகள், பறவைகளை ஒதுக்கீடு செய்வதை தேர்தல் ஆணையம் தடை செய்துவிட்டது.

அடம்பிடிக்கும் தீபா

இதை தீபாவுக்கு அவரது ஆதரவாளர்கள் பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர். ஆனால் இதை காதுகொடுத்து கேட்க மறுக்கிறாராம் தீபா.

சவால்

தேர்தல் ஆணையத்தில் சேவல் சின்னத்தை எப்படியும் வாங்கி கட்டுகிறேன் என்பதுதான் தீபாவின் இப்போதைய சவாலாம். சவாலில் வென்று சேவலை கைப்பற்றுவாரா தீபா? என்பதுதான் அந்த முகாமின் ஹாட் டாபிக்.

English summary
Sources said that Jayalalithaa's niece Deepa wanted with 'cock' symbol in RK Nagar By Election.
Please Wait while comments are loading...