தினகரனிடம் சம்மன் அளித்து விட்டு புறப்பட்டனர் டெல்லி போலீஸார்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டி.டி.வி தினகரனுக்கு டெல்லி போலீசார் சம்மன் அளித்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அடையாற்றில் உள்ள டி.டி.வி தினகரன் வீட்டிற்கு வந்த டெல்லி போலீசார், தினகரனிடம் சம்மனை அளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.

இரட்டை இலை சின்னத்தைப் பெற டிடிவி.தினகரன் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது கடந்த 17 ஆம் தேதி தெரியவந்தது. தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்

delhi police summons given to dinakaran

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெற்றுக் கொடுப்பதற்காக தினகரனிடம் இருந்து அவர் பணம் வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே தினகரனிடம் விசாரணை நடத்த, டெல்லி உதவி கமிஷ்னர் சஞ்சய் ஷெராவத், ஆய்வாளர் நரேந்திரஷா ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் விமானம் மூலம் நேற்றிரவு சென்னை  சென்னை வந்தனர்.

அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்குச் நேரில் சென்ற ஷெராவத் குழு தினகரனிடம் இரவு 11 மணிக்கு சம்மனை அளித்தனர். பின்னர் அவரை டெல்லிக்கு வருமாறும் அழைப்பு விடுத்தனர். சுமார் 15 நிமிட விசாரணைக்கு பிறகு டெல்லி போலீசார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.  வரும் சனிக்கிழமை டெல்லியில் ஆஜராக போலீஸ் சம்மன் வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
delhi police summons given to TTV dinakaran
Please Wait while comments are loading...