For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்.. சபாநாயகர் தனபால் மீது ஜெ. கடும் அதிருப்தி.. விரைவில் ராஜினாமா?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீது முதல்வர் ஜெயலலிதா கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் புதிய சபாநாயகர் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதாக 80 திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சபாநாயகர் தனபால் கடந்த 17-ந் தேதி அறிவித்தார். ஆனால் இந்த அமளியின் போது சபையில் இல்லாத 2 திமுக எம்.எல்.ஏ.க்களையும் சஸ்பெண்ட் செய்துவிட்டாராம் தனபால்.

இந்த 2 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மதுரை பிடிஆர்பழனிவேல்ராஜன் தியாகராஜன் இதை நீதிமன்றத்தில் குறிப்பிட்டு மனுத் தாக்கல் செய்திருக்கிறார். மற்றொரு எம்.எல்.ஏ.வை சஸ்பெண்ட் பட்டியலில் இருந்து சபாநாயகர் நீக்கிவிட்டார்.

Dhanapal to resign from TN Speaker post?

சட்டசபையில் பொதுவாக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றுவது, சஸ்பெண்ட் செய்வது என நடவடிக்கை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட நபரின் பெயரை சபாநாயகர் குறிப்பிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பது வழக்கம். ஆனால் திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் விவகாரத்தில் அப்படி நடந்து கொள்ளவில்லையாம்.

இதனால் நிச்சயம் நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக கோபமடைய செய்துள்ளதாம். இதேபோல் காவல்துறை மானியக் கோரிக்கை நாளில் மிகப் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுப்பதைப் போல பெரிய அளவில் போலீசார் குவிக்கப்பட்டதும் பத்திரிகையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டதும் ஜெயலலிதாவுக்கு கடும் அதிருப்தியாம்.

இதனால் நேற்று சட்டசபையில் 110-வது விதிகளின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட பின்னர் உடனே ஓய்வறைக்கு சென்றார் ஜெயலலிதா. அவர் சென்ற சிறிது நேரத்திலேயே அமைச்சர்கள், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோருக்கு அழைப்பு வந்தது.

அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, சி.வி.சண்முகம், அன்பழகன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். ஆனால் இத்தனை பேரிடமும் தனித்தனியே ஆலோசனை நடத்தி முடிக்கும் வரை சபாநாயகர் தனபால் 40 நிமிடமாக ஜெயலலிதாவின் அறைக்கு வெளியே காத்தே கிடந்தாராம். ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு தனபால் மிகவும் வருத்தத்துடன் வெளியே வந்தார்.

பின்னர் பத்திரிகைகளுக்கு அனுப்பிய முதல்வரின் 110-வது விதிகளின் கீழான அறிவிப்பு படத்தில் தனபால் படம் மிஸ்ஸிங். இதனால் நிச்சயம் சபாநாயகர் தனபால் மாற்றப்படுவது உறுதி என்கின்றன கோட்டை வட்டாரங்கள். விரைவில் சபாநாயகர் தனபால் தமது பதவியை ராஜினாமா செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

Dhanapal to resign from TN Speaker post?
Dhanapal to resign from TN Speaker post?

ஆக.12, ஆக.18-ந் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா 110-வது விதிகளின் கீழ் அறிவிப்பு வெளியிட்டது குறித்து பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட படங்களில் சபாநாயகர் தனபால் படம் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளது.

Dhanapal to resign from TN Speaker post?

ஆனால் நேற்று பத்திரிகைகளுக்கு அரசு அனுப்பிய படத்தில் சபாநாயகர் தனபால் படம் இடமே பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said that TN Speaker Dhanapal may resign from the post .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X