For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பென்னாகரத்தில் அன்புமணியை எதிர்க்கும் இன்பசேகரன்... தர்மபுரி மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா

Google Oneindia Tamil News

சென்னை: தர்மபுரியில் முக்கியமான திமுக வேட்பாளராக பி.என்.பி. இன்பசேகரன் களத்தில் நிற்கிறார். இவர் பென்னாகரம் தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

தர்மபுரி மாவட்ட திமுக வேட்பாளர்களின் பயோடேட்டா

டாக்டர் பிரபு ராஜசேகர்

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார் இந்த 32 வயது டாக்டர். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். 1996ம் ஆண்டு முதல் திமுகவில் இருந்து வரும் இவர் தற்போது மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராக இருந்து வருகிறார். சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

பி.கே.முருகன்

பாலக்கோடு தொகுதியில் போட்டியிடுகிறார் கொங்கு வேளாளர் வகுப்பைச் சேர்ந்த பி.கே.முருகன். வழக்கறிஞரான இவர் 2006-2011ல் பாலக்கோடு ஒன்றியக் குழுத் தலைவராக இருந்தார். தற்போது ஒன்றியச் செயலாளராக இருக்கிறார்.

சா.ராஜேந்திரன்

அரூர் தனி தொகுதியில் போட்டியிடுகிறார் ராஜேந்திரன். 56 வயதான இவர் விவசாயி ஆவார். மேலும், பெட்ரோல் பங்க், கேஸ் ஏஜென்சி, டிரான்ஸ்போர்ட் என பல தொழில்களில் ஈடுபட்டுள்ளார்.

தடங்கம் பெ. சுப்பிரமணி

தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் தடங்கம் பெ. சுப்பிரமணி, 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். விவசாயி. வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். 1986 முதல் 1991 மற்றும் 1996-2011 ஊராட்சி மன்றத் தலைவர், 1997-2001 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், 2006-2011 நல்லம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவராக இருந்தார். தற்போது தர்மபுரி மாவட்ட பொறுப்பாளராக உள்ளார்.

பி.என்.பி. இன்பசேகரன்

பென்னாகரம் தொகுதியில் மீண்டும் இன்பசேகரன் போட்டியிடுகிறார். இவர் மறைந்த பெரியண்ணனின் மகன் ஆவார். விவசாயம், கிரானைட் குவாரி, கல்வி நிறுவனங்கள் என பெரும் தொழிலதிபராக வலம் வருகிறார். 2009 முதல் 2014 வரை தருமபுரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்துள்ளார். 2010 இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

ஒய் பிரகாஷ்

தளி தொகுதியில் போட்டியிடுகிறார் ஒய் பிரகாஷ். பத்தாவது படித்துள்ளார். ஒக்கலிகா கவுடா வகுப்பைச் சேர்ந்தவர். விவசாயம் பார்க்கிறார். செங்கல் சூளை வைத்துள்ளார். 1986 முதல் திமுகவில் செயல்பட்டு வருகிறார். தளி தொகுதியில் 2 முறை போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியவர்.

English summary
Dharmapuri district DMK candidates biodata.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X