நமது எம்ஜிஆர், ஜெயா டிவியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய செய்திகள் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரிலும், அதிமுக தொலைக்காட்சியான ஜெயாடிவியிலும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரிலும், அதிமுக தொலைக்காட்சியான ஜெயாடிவியிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. டிடிவி தினகரனின் உத்தரவினாலேயே இவ்வாறு நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை படிப்படியாக ஒதுக்கி வருகிறார் டிடிவி தினகரன். இது கண்கூடாகவே தெரிந்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இப்போது அதிமுகவின் ஊடகங்களில் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய செய்திகள் அதிகம் இடம்பெறுவதில்லை.

டுவிட்டரில் டிடிவி

அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் துணைச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை, பேட்டிகளே அதிகம் பதிவிடப்படுகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தி மருத்துக்கு கூட பதிவாகவில்லை.

நமது எம்ஜிஆர்

நமது எம்ஜிஆரிலும் டிடிவி தினகரன் வெளியிட்ட நீர் மோர், தண்ணீர் பந்தல் அறிக்கைதான் பிரதானமாக இடம் பெற்றுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற குடிமராமத்து பணி பற்றிய செய்தி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஜெயா டிவி

ஜெயா தொலைக்காட்சியில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அதிகம் ஒளிபரப்பாவதில்லையாம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ற வார்த்தையைக் கூட தவிர்க்க சொல்லியிருக்கிறாராம் டிடிவி தினகரன்.

 

 

எடப்பாடிக்கு செக்

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தொடக்கி வைக்கும் நலத்திங்கள் பிற ஊடகங்களில் ஒளிபரப்பாவது போல கூட ஜெயாடிவியில் ஒளிபரப்பாவதில்லை. போகிற போக்கைப் பார்த்தால் கூடிய விரைவில் எடப்பாடி பழனிச்சாமியும் ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் அமர்ந்தாலும் அமர்ந்து விடுவார் போலவே. இன்னொரு தியானம், சபதத்தை கூடிய விரைவில் பார்க்கலாம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

English summary
ADMK sources say that Dinakaran has asked Jaya tv to curb news on CM Edappadi Palansisamy.
Please Wait while comments are loading...