ஆர்கே நகரில் கொட்டப் போகுது பணமழை... ஒரு ஓட்டுக்கு ரூ10,000 கொடுக்க தினகரன் திட்டம்?

திருமங்கலம் பார்முலா படி ஆர்கே நகரில் பணமழையை கொட்ட தயாராகி வருகிறது தினகரன் அண்ட் கோ. ஒரு ஓட்டுக்கு ரூ10,000 கொடுக்கவும் தினகரன் திட்டமிட்டுள்ளாராம்.

By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகரில் எப்படியும் வென்றாக வேண்டும் என்பதற்காக ஒரு ஓட்டுக்கு ரூ10,000 கொடுக்கும் திட்டத்தை வகுத்திருக்கிறாராம் சசிகலா அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரன்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக, சசிகலா அதிமுக, ஓபிஎஸ் அதிமுக ஆகியவை வென்றாக வேண்டிய நிலையில் உள்ளன. திமுக சார்பில் எளிய தொண்டரான மருது கணேஷ் நிறுத்தப்பட்டுள்ளார்.

தினகரன் - மதுசூதனன்

சசிகலா அதிமுக சார்பில் டிடிவி தினகரனும் ஓபிஎ அதிமுக சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் அல்லாமல் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என கூறிக் கொண்டு தீபாவும் களமிறங்கியுள்ளார்.

முதல்வர் பதவி பேராசை

இத்தேர்தலில் தினகரன் போட்டியிட முடியுமா? என்கிற கேள்வி இருக்கிறது. அதற்கு அப்பால் தாம் வெற்றி பெற்று முதல்வராகிவிட வேண்டும் என்ற முனைப்புடன் துடியாய் துடிக்கிறாராம் தினகரன்.

ஒரு ஓட்டுக்கு ரூ10,000

இதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ரூ10,000 தரவும் தினகரன் வியூகம் வகுத்துள்ளாராம். தற்போது பதுக்கிவைக்கப்பட்ட பணத்தை சேகரிப்பதில் தினகரன் தரப்பு படுதீவிரமாக இறங்கியுள்ளதாம். அத்தனையும் ரூ2,000 நோட்டுகளாக இருக்குமாறு பார்த்து கொள்கிறார்களாம்.

100 வாக்காளர்களுக்கு 5 பேர்

100 வாக்காளர்களுக்கு 5 பேர் கொண்ட ஒரு குழு அமைத்து பணப்பட்டுவாடா செய்யவும் திட்டமிடுட்ள்ளனராம். ஒரு ஓட்டுக்கு ரூ10,000 எனில் எவ்வளவு கோடியை களமிறக்க தினகரன் முடிவு செய்திருப்பார் என அதிமுகவினரே அதிர்ச்சியடைந்துள்ளனராம்.

English summary
Team Sasikala's Candidate TTV Dinkaran strongly beleive the Cash for vote 'Thirumangalam Formula' will help in RK Nagar by election.
Please Wait while comments are loading...