For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவை விட்டு ஓடினாதான் திஹார் போகாம தப்ப முடியும்...டெல்லி கண்டிஷனால் திகுதிகு தினகரன்

துணைப் பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்தால்தான் ஜாமீன் கிடைக்கும் என டெல்லி போட்ட கண்டிஷனில் ஆடிப் போயுள்ளாராம் டிடிவி தினகரன்.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தினகரனிடம் சசிகலா குடும்பத்தின் ஒட்டுமொத்த 'பட்டுவாடா' விவரங்களை கறக்க உள்ளது டெல்லி போலீஸ். அத்துடன் ஜாமீன் கிடைக்க வேண்டும் எனில் உடனடியாக அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என தினகரனுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறதாம்.

இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ50 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் தினகரன் என்பது வழக்கு. இவ்வழக்கில் முதலில் தினகரனின் புரோக்கர் சுகேஷ் பிடிபட்டார்.

மல்லி, ஜனார்த்தனன்

மல்லி, ஜனார்த்தனன்

இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லி என்ற மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோர் பிடிபட்டனர். இதில் ஜனார்த்தனன் அப்ரூவராகியுள்ளார்.

ஹவாலா கும்பலுக்கு குறி

ஹவாலா கும்பலுக்கு குறி

தற்போது டிடிவி தினகரனுடன் தொடர்புடைய கூட்டாளிகள் மற்றும் ஹவாலா கும்பலை பிடிக்க சென்னை வருகிறது டெல்லி போலீஸ். டிடிவி தினகரனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்துள்ள டெல்லி போலீஸ் சசிகலா குடும்பத்தின் ஒட்டுமொத்த பட்டுவாடா விவரங்களை கறக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திரா, கர்நாடகா

ஆந்திரா, கர்நாடகா

மேலும் தினகரனின் ஆந்திரா, கர்நாடகா தொழில்நிறுவன விவரங்களையும் தோண்டி எடுக்கிறது டெல்லி போலீஸ். இந்த விவரங்கள் அனைத்தையும் அறிந்தவர் மல்லி என்கிற மல்லிகார்ஜூனா என்பதால் அவரையும் சென்னைக்கு அழைத்து வருகிறது டெல்லி போலீஸ்.

துணை பொதுச்செயலர் பதவி ராஜினாமா

துணை பொதுச்செயலர் பதவி ராஜினாமா

இதனிடையே தினகரன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பதுடன் சர்ச்சைக்குரிய அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவியையும் ராஜினாமா செய்தாக வேண்டும் என நெருக்கடி கொடுக்கிறதாம் டெல்லி. அப்படி செய்தால் மட்டுமே தினகரன் சிறைக்கு போகாமல் ஜாமீனில் வெளியே வரமுடியும் என செக் வைக்கிறதாம் டெல்லி.

English summary
Delhi sources said that TTV Dinakaran will reveal all details of the Sasikala family's business dealings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X