டைம் முடிஞ்சு போச்சு.. மாநிலம் முழுவதும் சுற்றப் போகிறேன்.. தினகரன் அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைய வரும் 5ம் தேதி வரை டிடிவி தினகரன் கெடு விதித்திருந்தார். ஆனால் இந்த இரண்டு அணிகளும் இணைவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் தினகரன் பேசியதாவது:

Dinakaran travels around Tamil Nadu

இரு அணிகளும் இணைய 5ம் தேதி வரை கெடு விதித்தேன். அவர்கள் இன்னும் இணையவில்லை. இந்நிலையில், வரும் 4ம் தேதி அதிரடியாக எனது முடிவுகளை அறிவிக்க உள்ளேன்.இதனைத் தொடர்ந்து 5ம் தேதி என்னுடைய திட்டங்களை என்னென்ன என்பதைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

மேலும், தமிழகத்தில் அதிமுகவை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்காகத் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று தினகரன் கூறினார்.

Thirumavalavan Speech About TTV Dinakaran Arrested-Oneindia Tamil

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran will travels around Tamil Nadu to strengthen ADMK
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்