For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனியர்கள் பிளஸ் ஜூனியர்.. அதிமுகவின் திண்டுக்கல் மாவட்ட வேட்பாளர்களின் பயோடேட்டா

By Mathi
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அதிமுக வேட்பாளர்களாக சீனியர்களான சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பழனி குமாரசாமி ஆகியோரும் 36 வயதான இளைஞர் டாக்டர் விபிபி பரமசிவமும் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்பு:

சீனிவாசன்

திண்டுக்கல் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சீனிவாசன் (வயது 68) 1972ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக இருந்து வருகிறார். தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர். அதிமுகவின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட விவசாயப் பிரிவு செயலர், திண்டுக்கல் மாவட்டச் செயலர், மாநிலப் பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார், தற்போது திண்டுக்கல் மாவட்ட அவைத் தலைவராக இருந்து வருகிறார். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும், 4 முறை லோக்சபா எம்.பி.யாகவும் பதவி வகித்தவர் சீனிவாசன்.

விஸ்வநாதன்

விஸ்வநாதன்ஆத்தூர் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர். நத்தம் தொகுதியில் 1999ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் நத்தம் விஸ்வநாதன் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். தொடர்ந்து 2001, 2006, 2011 தேர்தல்களிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்தார். இம்முறை ஆத்தூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

டாக்டர் விபிபி பரமசிவம்

வேடசந்தூர் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் விபிபி பரமசிவம்( வயது 36), திண்டுக்கல் மாவட்ட அதிமுக மருத்துவ அணி துணைச் செயலராக இருந்து வருகிறார். வேடசந்தூர் தொகுதியில் பெரும்பான்மையினராக உள்ள ஒக்கலிகா கவுடா சமூகத்தைச் சேர்ந்தவர். எம்பிபிஎஸ்., டி.ஆர்த்தோ, எம்சிஹெச்(ஆர்த்தோ) படித்த இவரது சொந்த ஊர் வேடசந்தூர் அருகே உள்ள வெல்லம்பட்டி. டாக்டர் பரமசிவத்தின் தந்தை வி.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 1980 மற்றும் 1984 சட்டசபை தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1984-87 வரை சட்டசபை துணை சபாநயகராகவும் பணியாற்றியவர்.

ஷாஜகான்

நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.ஷாஜகான்(வயது 67) குட்டுப்பட்டியைச் சேர்ந்தவர். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர். 1980-ம் ஆண்டு முதல் தற்போது வரை அதிமுகவின் நத்தம் ஒன்றியச் செயலராக இருந்து வருகிறார்.

தங்கதுரை

நிலக்கோட்டை(தனி) தொகுதி அதிமுக வேட்பாளரான தங்கதுரை (வயது 59), அக்ரஹாரப்பட்டியைச் சேர்ந்தவர். அதிமுகவின் மின்வாரிய அண்ணா தொழிற்சங்கத்தின் மதுரை மண்டல செயலர், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் மற்றும் செயலராக பொறுப்பு வகித்துள்ளார். அரசு குற்றவியல் சிறப்பு வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார்.

குமாரசாமி

பழனி அதிமுக வேட்பாளரான ப.குமாரசாமி (68) அக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர். திண்டுக்கல் மாவட்ட அதிமுக துணைச் செயலாளராக இருந்து வருகிறார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 1993 மற்றும் 1999ல் அதிமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

English summary
Here the Bio datas of Dindigul Dist. AIADMK candidates:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X