For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாழ்ப்பாணத்தில் பாரதிராஜா - டக்ளஸ் தேவானந்தா சந்திப்பால் சர்ச்சை!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: யாழ்ப்பாணம் சென்றிருந்த இயக்குநர் பாரதிராஜா, சர்ச்சைக்குரிய டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்ததால் சர்ச்சை வெடித்துள்ளது.

இலங்கை யாழ்ப்பாணத்துக்கு திடீரென சென்ற இயக்குநர் பாரதிராஜா அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் வடக்கு மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரையும் சந்தித்து பேசினார்.

முன்னதாக பாரதிராஜா- டக்ளஸ் தேவானாந்தா இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

Director Bharathiraja's Controversial Jaffna visit

கோத்தபாயவின் நண்பர்தான் பாரதிராஜாவை யாழ்ப்பாணத்துக்கு அழைத்தார் என்றும் தமிழகத்தில் தேடப்படுகிற குற்றவாளி; தமிழினத்துக்கு துரோகம் செய்த டக்ளஸை எப்படி பாரதிராஜா சந்திக்கலாம் என்றும் இந்த சந்திப்பில் பிரபாகரனை பயங்கரவாதி என்று பாரதிராஜா கூறினார் எனவும் சமூக வலைதளங்களில் தமிழின உணர்வாளர்கள் கொந்தளிக்கின்றனர்.

இருப்பினும் பாரதிராஜா அப்படி எல்லாம் செய்யவில்லை; உண்மையை புரியாமல் பேசுவதாக ஒருதரப்பும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

Director Bharathiraja's Controversial Jaffna visit

பாரதிராஜா சொன்னது என்ன? கவுதமன் விளக்கம்

இதனிடையே இயக்குநர் வ. கவுதமன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

உலகமுழுக்க வாழ்ந்து கொண்டிருக்கும் என் உயிருக்கு நிகரான தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.

உங்களை போலவே இயக்குனர். பாரதிராசா அவர்களின் இலங்கை பயணத்தை கண்டு நானும் அதிர்ச்சி அடைந்தேன். தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் சொன்னது போல "தவறு யார் செய்தாலும் அது தவறு தான்".

இயக்குனர். பாரதிராசா அவர்களிடம் உடனடியாக நான் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பொது "இந்த வயதில் நான் சோரம் போவேனா" என்று பேச தொடங்கி, என் இனத்திற்கும் நான் பெரிதும் மதிக்கும் தம்பி பிரபகரனுக்கும் ஒரு போதும் தோரகம் செய்ய மாட்டேன்.

சம்மந்தம் இல்லாமல் நான் இருக்கும் இடத்தை தேடிவந்து டக்ளசு தேவானந்தா என்னை சந்தித்த போது விருப்பம் இல்லாமலேயே பேச நேர்ந்தது. மீனவர் பிரச்சனை பற்றிப் பேச ஆரம்பதித்த உடனே அரசியல் இப்போது பேச வேண்டாமே என்று சொல்லிக்கொண்டடி இருக்கும்போதே அவர்களது ஆட்கள் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். ஒரு வழியாக அவரை பேசி அனுப்பிவிட்டு, அதன் பிறகு சென்று முதலமைச்சர் விக்னேசுவரன் அவர்களையும், அமைச்சர் ஐயங்கரன் நேசன் அவர்களையும் சந்தித்தேன்.

இவர்கள் இருவரையும் சந்திப்பதற்குள் அவசர அவசரமாக டக்ளசு தேவானந்தா குழு எடுத்த புகைபடத்தை வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

அது மட்டும் அல்ல என்னை அழைத்தது லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தை பராமரிக்கும் மரியாதைக்குரிய கோபால் அவர்கள் தான். அவர்களை தவிர என் இனத்திற்கு எதிரானவர்களின் அழைப்பின் பேரில் நான் இலங்கைக்கு செல்லவில்லை

என்னுடைய தாய் தமிழ்நாட்டின் மண்ணை மிதிபதற்க்குள் நான் உயிராய் நேசிக்கும் உலகமெங்கும் வாழும் என் தமிழ் உறவுகளிடம் இந்த பயணத்தை பற்றிய விளக்கத்தை சொல்லிவிட்டுத் தான் இலங்கை மண்ணில் இருந்து புறப்படுவேன், என் உயிரே போனாலும் சரி என்ற வார்த்தைகளுடன் முடித்துக்கொண்டார்.

முள்ளிவாய்க்கால் இனபடுக்கொலை நடந்த காலகட்டத்தில் இயக்குனர் பாரதிராசா - என் இனத்தை அழிக்கக் காரணமாய் இருந்த இந்திய அரசு கொடுத்த தேசிய விருதையும், பத்மபூசன் விருதையும் பல்லாயிர கணக்கான தமிழ் உறவுகளின் முன்னால் இரு கைகளிலும் ஏந்தி உடைக்கவா இல்லை திருப்பி இந்திய அரசிடமே அனுப்பவா என்று கேட்டவர்.

ஆகவே அவரை பற்றி தீர ஆராய்ந்து பார்க்காமல் விமர்சனம் செய்வதை சிறிது யோசித்து செய்யுங்கள் என்று என் தாய் தமிழ் உறவுகளிடம் தாழ்மையோடும், உரிமையுடனுடம் கேட்டுகொள்கிறேன்.

அதே நேரத்தில் தவறு நடந்திருந்தால் என் தாய்க்கும், தாய் மொழிக்கும் சமமான என்னுடைய தமிழீழ் தேசிய தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள் சொன்னது போல சமரசம் இல்லாமல் விமர்சனம் செய்வோம்.

இவ்வாறு கவுதமன் கூறியுள்ளார்.

பாரதிராஜா செய்தியாளர்களிடம் விளக்குகிறார்?

இதனிடையே இயக்குநர் பாரதிராஜா இன்று செய்தியாளர்களிடம் இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Director Bharathiraja's Jaffna Visit erupts new controversy in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X