கிண்டி மேம்பாலத்தை பூட்டிய இயக்குநர் கவுதமனை தே.பா. சட்டத்தில் உள்ளே போடுங்கள்-சொல்கிறார் எச்.ராஜா

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கிண்டி மேம்பாலத்தில் பூட்டுப் போட்டு போராடிய வ.கவுதமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகளுக்காக ஆதரவாக கிண்டி மேம்பாலத்தில் பூட்டுப் போட்டு போராடிய இயக்குநர் கவுதமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பாகஜவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

தமிழக விவசாயிகள் டெல்லியில் 32 ஆவது நாளாகப் போராடி வருகின்றனர். ஆனால் இன்று வரை அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றபப்டவில்லை. ஆனால் பாஜக தேசிய செயலாளர் அப்போராட்டத்தை கேவலமாக விமர்சித்துப் பேசி வருகிறார்.

Director gowthaman should be arrested in NSa told H.Raja

விவசாய போராட்டத் தலைவர் அய்யாக்கண்ணுவை ஆடி கார் வைத்திருக்கார், நூறு ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார் என்று கூறி அவரை அவமானப்படுத்தினார். அடுத்து,'அய்யாக்கண்ணு அவருடைய நண்பர்களுடன் டெல்லியில் அர்ந்திருக்கிறார்' என விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினார்.

இந்நிலையில் விவசாயிகளை, பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் என்று ஏமார்றியது டெல்லி போலீஸ். இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் டெல்லி சாலையில் நிர்வாணமாக ஓடினர்;புரண்டனர். இதைக் கண்டு மொத்த இந்தியாவும் கொதித்தது.

அதனையடுத்து, இயக்குநர் வ.கவுதமன் தலைமையிலான இளைஞர் கூட்டம் மொத்த சென்னையும் ஸ்தம்பிக்கும்படி, கிண்டி மேம்பாலத்துக்குப் பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தியது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் வ.கவுதமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று கண்டுபிடிக்க வேண்டும் என தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.

தமிழ்நாட்டில் யார் எந்த போராட்டத்தில் ஈடுபட்டாலும் அவர்களை தேசவிரோதி என முத்திரை குத்தி வருவதை தொடர்ந்து செய்து வருகிறார் எச்.ராஜா.

English summary
H.Raja, Bjp leader told in his twitter page that director va. Gowthaman shoul be put under national security act.
Please Wait while comments are loading...