For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா அரசுக்கு எதிராக விஜய்காந்த்தின் புதிய 'மீம்ஸ்' அட்டாக்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்டு இணையவாசிகள் பரப்புவர். வெறும் நகைச்சுவையாக வெளியிடப்படும் இவைகளுக்கு இடையே, தற்போது, சமூக வலைதளங்களை பிரசார ஊடகமாக்கியுள்ளன அரசியல் கட்சிகள்.

சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக, திமுக கட்சிகள் சமூக வலைதளாமான ஃபேஸ்புக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அதிமுக ஆதரவாளர்கள் திமுகவுக்கு எதிராகவும், திமுக ஆதரவாளர்கள் அதிமுகவுக்கு எதிராகவும் மீம்ஸ் போட்டு இணையத்தை கலங்கடித்து வருகின்றனர். அதே நேரத்தில் எதிர்கட்சியான தேமுதிக, ஆளும் அதிமுக அரசை விமர்சித்து புதிய மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறது.

தேமுதிக சமூக வலைதள அமைப்பு சார்பில் வெளியிடப்படும் இந்த மீம்ஸ் பிரசாரம், ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் என பல்வேறு தளங்களில் இறக்கி விடப்பட்டுள்ளன. இளைஞர்களை கவரும் விதமாக முன்னெடுக்கப்படும் இந்த யோசனை எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

 ஸ்டிக்கர் மீம்ஸ்

ஸ்டிக்கர் மீம்ஸ்

வெள்ள நிவாரணம் தொடங்கி இலவச கல்யாணம் வரை அனைத்திலும் ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினரை கிண்டலடிக்கிறது இந்த மீம்ஸ்

 ஓட்டை உடைசல் பேருந்துகள்

ஓட்டை உடைசல் பேருந்துகள்

தமிழகத்தில் ஓடும் பேருந்துகளில் பல பேரிச்சம் பழம் வாங்க கூட லாயக்கற்றதாக இருக்கிறது. அதை கிண்டலடிக்கிறது தேமுதிக.

கடன்சுமை

கடன்சுமை

அதிமுக ஆட்சி காலத்தில் கடன் சுமை அதிகரித்து விட்டதாகவும் தமிழக அரசு கஜானா காலியாகிவிட்டதாவும் சொல்கிறது இந்த மீம்ஸ்.

 குழியான சாலைகள்

குழியான சாலைகள்

பல கோடி செலவு செய்து போடப்பட்ட சாலைகள் மழை வெள்ளத்தில் ஊறிப்போய் குண்டும் குழியுமாக மாறியது. அதற்காகவே இந்த மீம்ஸ்.

 விவசாயிகள் சாவு

விவசாயிகள் சாவு

வெள்ளமோ, வறட்சியோ அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். அதிமுக ஆட்சியில் விவசாயிகளை அரசு கண்டு கொள்வதில்லை என்பதற்காகவே இந்த மீம்ஸ். இதற்கு அதிமுக தொழில்நுட்பக் குழு என்ன பதில் அட்டாக் தரப் போகிறதோ.. ஸ்டார்ட் மியூசிக்!!

English summary
DMDK launched its social media campaign releasing posters on its Facebook page. The new posters to herald the party’s rally “Turning Point Conference in Tamil Nadu Politics” to be held on February 20 at Kancheepuram, question the ruling AIADMK’s poll promise made in run up to the 2011 Assembly polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X