கடனில் தள்ளாடும் தமிழகத்தை கடனாளியாக்குகிறது நிதிநிலை அறிக்கை.. விஜயகாந்த் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடனில் தள்ளாடும் தமிழகத்தை கடனாளியாக ஆக்குகிறது இந்த நிதிநிலை அறிக்கை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் 2017-2018 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

DMDk leader vijayakanth slammed the budget

தமிழக அரசின் பட்ஜெட் பூஜ்ஜியத்தை ராஜ்ஜியம் ஆக்கும் பட்ஜெட் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசின் பட்ஜெட் குறித்து கூறுகையில், ஏற்கனவே கடனில் தள்ளாடும் தமிழகத்தை மேலும் கடனாளியாக ஆக்குகிறது நிதிநிலை அறிக்கை.

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பல இதுவரை தொடங்கப்படவே இல்லை. நிதி முறையாக பயன்படுத்தியிருந்தால் தமிழகம் பின் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீர் பற்றாக்குறையை உடனடியாக போக்க தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
DMDk leader vijayakanth slammed the budget of ADMK saying it had nothing for development of the State.
Please Wait while comments are loading...