For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக-னா மாஸ்... திரு.மு.க-னா பக்கா மாஸ்.. போஸ்டரில் உருகிய "உடன் பிறப்புகள்"!

Google Oneindia Tamil News

சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை திமுகவினர் தடபுடலாக கொண்டாடி விட்டனர் இன்று. விதவிதமான போஸ்டர்கள் அடித்தும், பரிசுப் பொருட்கள் அளித்தும் தலைநகர் சென்னையிலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் திமுகவினர் தங்களது தலைவரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.

கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும், அன்னதானம் உள்ளிட்டவற்றை நடத்தியும் திருவிழா போல கருணாநிதியின் 92வது பிறந்த நாளை திமுகவினர் இன்று கொண்டாடினர்.

சென்னையில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் திமுகவினரின் வாழ்த்துகளை கருணாநிதி நேரில் பெற்றுக் கொண்டார்.

புறாக்களைப் பறக்க விட்டு

புறாக்களைப் பறக்க விட்டு

அண்ணா அறிவாலயத்தில் கூடிய தொண்டர்கள் சிலர் புறாக்களை கொண்டு வந்து அதைப் பறக்க விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காசு மாலை

காசு மாலை

இன்னும் சிலர் ரூபாய் நோட்டுக்களால் ஆன காசு மாலையை கொண்டு வந்திருந்தனர். கருணாநிதிக்கு அணிவிக்க இவற்றுடன் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். தாரை தப்பட்டை முழங்க அவர்கள் ஊர்வலமாக வந்தனர்.

சிங்கப் பரிசு

சிங்கப் பரிசு

இன்னொரு தரப்பு இரண்டு பெரிய சிங்கங்கள் அமர்ந்திருப்பது போன்ற ஒரு பரிசுப் பீடத்தைத் தூக்கி வந்தனர்.

முயல் குட்டிகள்

முயல் குட்டிகள்

ஒரு தொண்டர் தனது தலைவருக்கு பரிசாக அளிப்பதற்காக 2 முயல் குட்டிகளைத் தூக்கிக் கொண்டு வந்திருந்தார்.

ஆங்காங்கே சாப்பாடு

ஆங்காங்கே சாப்பாடு

திருவிழாவுக்குப் போகும்போது கட்டுச் சோறு எடுத்துக் கொண்டு போவது போல அறிவாலயம் வந்த பலர் கையைோடு உணவையும் கொண்டு வந்து ஆங்காங்கே அமர்ந்து சாப்பிட்ட காட்சிகளையும் காண முடிந்தது.

காஞ்சிபுரத்தில்

காஞ்சிபுரத்தில்

காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன் பல்வேறு இடங்களில் கொடி ஏற்றி உணவு வழங்கினார். குன்றத்தூரில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கிய அவர் ஏழைகளுக்கு உணவும் வழங்கினார்.

பிரியாணி விருந்து

பிரியாணி விருந்து

குன்றத்தூர் ஒன்றியம் படப்பை பஜாரில் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 1092 பேர்களுக்கு அறுசுவை உணவு, பிரியாணி வழங்கினார்.

92 கிலோ கேக்

92 கிலோ கேக்

வண்டலூர், கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோவில் ஆகிய இடங்களில் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி தலைமையில் நடந்த விழாவில் ஏழைகளுக்கு அறுசுவை உணவு வழங்கி கூடுவாஞ்சேரியில் 92 கிலோ எடையுள்ள ராட்சத கேக்கை வெட்டி சிறப்புரையாற்றினார்.

மாஸ்... பக்கா மாஸ்...

மாஸ்... பக்கா மாஸ்...

பரிசுப் பொருட்களைப் போலவே விதவிதமான வித்தியாசமான போஸ்டர்களால் சுவர்களை அலங்கரித்திருந்தனர் திமுக தொண்டர்கள். அதில் ஒன்றில், சமீபத்தில் வெளியான காஞ்சனா 2 பட டயலாக்கை சுட்டு புது டயலாக் தயாரித்திருந்தனர்.

திரு.மு.க -ன்னா பக்கா மாஸ்...

திரு.மு.க -ன்னா பக்கா மாஸ்...

அதாவது, நீ மாஸ்னா, நான் பக்கா மாஸ் என்பது ஒரிஜினல் டயலாக். அதை கொஞ்சம் பட்டி பார்த்து, ‘திமுக-ன்னா மாஸ், திரு.மு.க.-ன்னா பக்கா மாஸ்' என மாற்றியுள்ளனர்.

ஆண்ராய்டே...

ஆண்ராய்டே...

மற்றொரு போஸ்டரில் அடங்கா ஆங்கிரி பேர்டை அடக்கி ஆளும் ஆண்ட்ராய்டை வாழ்த்தி வணங்குகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

English summary
DMK President M Karunanidhi on Wednusday turned 92 as scores of party cadres celebrated the occasion by distributing sweets across the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X