For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக, இந்து அமைப்புகளுக்கு எதிராக, சமூக வலைத்தளங்களில் திக, திமுக கறுப்பு சட்டை போராட்டம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் அறிவித்த, கறுப்பு சட்டை கிழிப்பு போராட்டத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தி.க., திமுக போன்ற கட்சியினர் கருப்பு சட்டை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திராவிட இயக்கங்களுக்கும் இந்துத்வா அமைப்புகளுக்கும் நடக்கும் கருத்து யுத்தம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் தற்போது இந்து ஆதரவு கருத்தாளர்கள் வலு பெற்று வருவது போன்ற சூழல் உருவாகியுள்ளது. எனவே, தி.க.வினருக்கு டஃப் கொடுத்து வருகின்றனர்.

DMK and DK caders started black revolution in the social media platforms

இந்நிலையில்தான், தி.க அறிவித்த தாலி அகற்றும் போராட்டம் பெரும் சர்ச்சையை உருவாக்கிவிட்டது. கடந்த 14ம்தேதி, இந்த போராட்டத்தை தி.க நடத்தியது. எனவே, தி.கவுக்கு எதிராக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் ஓரணியில் திரண்டுள்ளன.

பா.ஜ.கவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்பட பலரும் திராவிடர் இயக்கங்களுக்கு நேரடி சவால் விட்டு வருகின்றனர். சமீபத்தில் தி.க. நடத்திய தாலி அகற்றும் நிகழ்வுக்குப் போட்டியாக கருப்புச் சட்டை கழற்றும் போராட்டம் நடத்துவோம் என பா.ஜ.க மற்றும் இந்துத்வா அமைப்புகளிடமிருந்து குரல்கள் ஒலித்தன.

இதற்கு பதிலடி தரும் வகையில் சமூக வலைத்தளங்களில் உள்ள பெரியார் இயக்கத்தினர் மட்டுமின்றி, தி.மு.கவினரும் தங்கள் எதிர்க்குரலை துரிதமாக பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதற்காக சமூக வலைத்தள பிரச்சாரத்தை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். பேஸ்புக் ப்ரோஃபைல் பிக்ச்சர்களாக கருப்புச் சட்டை அணிந்துள்ள படத்தை அவரவரும் பதிவிடவேண்டும் என தீர்மானித்து, தி.மு.கவினர் பலரும் கருப்புச் சட்டையுடனான படங்களைப் பதிவிட்டுள்ளனர்.

தங்கள் படத்தைப் பதிவு செய்வதைத் தவிர்ப்பவர்களும் கருப்புச்சட்டையில் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் இருக்கும் படங்களைப் பதிவிட்டுள்ளார். பெரியார் படத்தையும் பலர் பதிவிட்டுள்ளனர். தி.மு.கவினர் மட்டுமின்றி இடதுசாரிகளும் பா.ஜ.க தரப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

காலத்துக்கு ஏற்ப கருப்பு சட்டை போராட்டம், சமூக வலைத்தளத்திற்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதே உண்மை.

English summary
DMK and DK caders started black revolution in the social media platforms. As they want to show their unity to BJP, they using facebook and other social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X