For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுவிலக்கு, மாணவர்களுக்கு இலவச இண்டர்நெட், லேப்டாப் அல்லது டேப்லெட்- தேர்தல் அறிக்கையில் திமுக

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு சட்டம் கொண்டுவரப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்

2016 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அதனை கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் பெற்றுக்கொண்டார்.

திமுக தேர்தல் அறிக்கை 72 பக்கங்கள் கொண்டதாக உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த தேர்தல் அறிக்கையை டி.ஆர்.பாலு தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்தனர்.

DMK election manifesto released by karunanidhi

திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

1. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் உருவாக்கப்படும்

2. டாஸ்மாக் நிறுவனம் கலைகப்பட்டு அதில் பணியாற்றுவோருக்கு மாற்றுப்பணி வழங்கப்படும்.

3. மது அடிமைகளுக்கு சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

4. விவசாயிகளுக்கு கடன்கள் முழுக்க தள்ளுபடி

5. மகளிருக்கு 9 மாதகால காலம் பேறுகால விடுமுறை அளிக்கப்படும்

6. மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு திட்டம் கொண்டுவரப்படும்

7. அனைத்து விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்

8. வெள்ள சேதங்களை தடுக்க 5 ஆயிரம் கோடியில் திட்டம்

9. தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும்

10. அனைத்து நாட்களிலும் ரேசன் பொருட்கள் வழங்க நடவடிக்கை

11. மத்திய அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாக தமிழ் இடம்பெற நடவடிக்கை

12. ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும்

13. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.7 வரை குறைக்கப்படும்

14. 3 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

15. விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்

16. கரும்புக்கு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு 3,500 வழங்கப்படும்

17. சுயதொழில் தொடங்க ஒரு லட்சம் நிதி வழங்கப்படும்

18. மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு சட்டம் கொண்டுவரப்படும்

19. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை

20. மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்

21. தமிழகம் முழுவதும் முதியோருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை

22. சென்னை முதல் ஓசூர் வரை நெடுஞ்சாலை தொழிற்சாலைகள் திட்டம்

23. மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்

24. மீனவர் சமுதாயத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

25. 10 ஆயிரம் கோடி செலவில் தமிழகத்தில் உள்ள ஏரிகள் தூர் வாரப்படும்

26.தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவோடு பால் வழங்கப்படும்

27.மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும்

28.மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5000 தரப்படும்

29.விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டை வழங்கப்படும்

30.மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை

31.மீனவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்ப்டும்

32.படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை

33.ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 7 வரை குறைக்கப்படும்

34.மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்

35.மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும்

36.மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி

37.முதியோர் உதவித்தொகை ரூ. 1300 ஆக உயர்த்தப்படும்

38. தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை அமைக்கப்படும்

39. பத்திரிக்கையாளர்கள் மீதான அவதூறு வழக்குகள் திரும்பப் பெறப்படும்

40. தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் 16 லட்சம் மாணவர்களுக்கு 3ஜி,4ஜி தொழில்நுட்பத்தில் மாதம் 10 ஜிபி பதிவிறக்கம் செய்யும் வசதி கொண்ட இணைய இணைப்புக்கான டாங்கிளுடன் லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்கப்படும்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை முழுமையாக வாசிக்க:

https://www.docdroid.net/bvkYVQx/manifesto-tamil1.pdf.html

English summary
DMK election manifesto released by karunanidhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X