For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துண்டு தலைவருடன் கை கோர்த்த கருணாநிதி குடும்ப உறுப்பினர்! திமுகவில் மையம் கொள்கிறது கலகக் குரல்!!

திமுகவில் கலகக் குரல் மையம் கொள்ள தொடங்கியுள்ளது. 'துண்டு' தலைவரின் வழிகாட்டுதல் அதிருப்தியாளர்களை கருணாநிதி குடும்ப உறுப்பினர் ஒருங்கிணைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவிலும் தலையெடுக்கத் தொடங்கிவிட்டது அதிருப்தி குரல்கள்... துண்டு தலைவரின் வழிகாட்டுதலில் கருணாநிதி குடும்ப உறுப்பினரே அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக தலைவர் கருணாநிதியிடம் கட்சியில் தங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதனால்தான் ராஜ்யசபா எம்பி பதவி, தென்மண்டல அமைப்புச் செயலர் என வாரி வழங்கப்பட்டன.

எதிர்காலம் கேள்விக் குறி

எதிர்காலம் கேள்விக் குறி

இதன்பின்னர் மெல்ல மெல்ல காலம் மாறியது. குடும்ப உறுப்பினர்களில் பலரும் ஓரம்கட்டப்பட்டுவிட்டனர். தற்போது கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களது அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விக்குறியில் தவித்து வருகின்றனர்.

காத்திருங்கள்.. காலம் வரும்

காத்திருங்கள்.. காலம் வரும்

இதையடுத்துதான் தங்களது தொடர்பில் இருக்கும் துண்டு தலைவரிடம் கருணாநிதி குடும்ப உறுப்பினர் ஒருவர் புலம்பியிருக்கிறார். அவரோ இப்போதைக்கு எந்த ஒரு முட்டலும் மோதலும் வேண்டாம்... அமைதியாக காய்நகர்த்துவோம் என கூறி சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

தூபம் போடும் துண்டு தலைவர்

தூபம் போடும் துண்டு தலைவர்

இந்த அறிவுரையின்படி குமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள அதிருப்தியாளர்களுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை அந்த குடும்ப உறுப்பினர் தொடங்கியுள்ளார். அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து கொண்டே இருங்கள் காலம் வரும்போது சொல்லுகிறேன் என துண்டு தலைவர் தூபம் போட்டு கொண்டே இருக்கிறாராம்.

அறுவடை யாருக்கு?

அறுவடை யாருக்கு?

இந்த தைரியத்தில்தான் பகிரங்கமாக தற்போது துண்டு தலைவரும் பல விஷயங்களை மேடைகளில் பேசிவருகிறாராம். திமுகவில் மையம் கொண்டிருக்கும் கலகக் குரலை இப்போதே சரி செய்யாவிட்டால் விரைவில் அதிருப்தி குரலை ஏதோ ஒரு கட்சி அறுவடை செய்வது மட்டும் உறுதி என ஆதங்கப்படுகின்றனர் திமுகவின் மூத்த தலைவர்கள்.

English summary
Sources said that the internal crisis is growing with in the DMK party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X