For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

11வது முறையாக திமுக தலைவராகிறார் கருணாநிதி... ஜன. 9ம் தேதி பொதுக்குழு?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் திமுக தலைவராக 11வது முறையாக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. செயலாளர், பொருளாளர் பதவிக்கும் அன்றைய தினம் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.

தி.மு.க. உள்கட்சி தேர்தலில், 41 மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய - நகர - பகுதி செயலாளர்கள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

DMK General council meeting on January 9

இன்னும் 1 வார காலத்தில் சென்னை உள்ளிட்ட எஞ்சிய மாவட்ட தேர்தல் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு பொதுக்குழு கூடும். இந்த கூட்டத்தில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

இந்த ஆண்டிற்கான தி.மு.க. பொதுக்குழு ஜனவரி 9ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என தெரிகிறது. அண்ணா இறந்த பிறகு 1969ஆம் ஆண்டில் இருந்து தி.மு.க. தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.

தற்போது 10வது முறையாக தலைவராக உள்ளார். இப்போது நடைபெறும் பொதுக் குழுவில் 11வது முறையாக மீண்டும் தி.மு.க. தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தற்போது பொருளாளராக உள்ள மு.க.ஸ்டாலின் துணைத்தலைவராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போதே பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும். இதன் பிறகு துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நியமனம் நடைபெறும் என தெரிகிறது.

English summary
DMK has convened its General council meeting on January 9 in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X