For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அசர வைக்கும் இலவச அறிவிப்புகள் இடம்பெறுமா? திமுக தேர்தல் அறிக்கை பிப். 13-ல் வெளியீடு?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை அசர வைக்கும் இலவச அறிவிப்புகளுடன் வரும் 13-ந் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2006-ல் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ரூ.2க்கு ரேசன் அரிசி, இலவச கலர் டிவி உள்ளிட்ட அறிவிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு நல்ல ஆதரவையும் பெற்று தந்தது.

DMK manifesto to release on Feb.13 ?

இந்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இக் குழுவில் ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, துணை பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களது கருத்துகளை கேட்டறிந்துள்ளனர். மேலும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளார்.

இதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு கருணாநிதியிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை வரும் 13-ந் தேதி அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி வெளியிட உள்ளார்.

இந்த ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் அனைத்து தரப்பு மக்களையும் திரும்பிப் பார்க்க வைக்கும் இலவச அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கிய அறிவிப்புகளும் இருக்கும் என்கின்றன திமுக வட்டாரங்கள்.

English summary
Sources said that DMK will release its manifesto for State Assembly election on Feb.13.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X