For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இப்போது தேர்தல் நடந்தால் திமுகவே வெல்லும்.. நாம் தமிழருக்கு 2வது இடம்.. ஒன்இந்தியா சர்வே

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கருத்துக் கணிப்பில் முதலிடத்தை திமுக பிடித்துள்ளது. 2வது இடம் நாம் தமிழர் கட்சிக்கும், பாஜகவுக்கு 3வது இடமும் கிடைத்துள்ளன.

தமிழக அரசியல் சூழலை வைத்து நமது வாசர்களின் மன நிலை, எண்ண ஓட்டம் எப்படி உள்ளது என்பதை அறியும் வகையில் தமிழகத்தில் இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்வியைக் கேட்டிருந்தோம்.

இந்தக் கருத்துக் கணிப்பில் திமுக முதலிடம் பிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. பாஜகவுக்கு 3வது இடமே கிடைத்துள்ளது.

திமுக

திமுக

அதிமுகவின் பரம வைரியான திமுகவுக்கு வாசகர்கள் மத்தியில் முதலிடம் கிடைத்துள்ளது. இருப்பினும் மிகப் பெரிய அளவிலான ஆதரவை திமுக பெறத் தவறியிருப்பதை அறிய முடிகிறது. திமுகவுக்கு கிடைத்துள்ள வாக்குககள் 13,239 ஆகும். அதாவது 30.78 சதவீத வாக்குகள்.

2வது இடத்தில் நாம் தமிழர்

2வது இடத்தில் நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சிக்கு 2வது இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்சிக்கு 22.3 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது 9592 வாக்குகள் இக்கட்சிக்கு கிடைத்துள்ளது.

3வது இடத்தில் பாஜக

3வது இடத்தில் பாஜக

பாஜகவுக்கு 3வது இடமே கிடைத்துள்ளது. இக்கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 8.3 சதவீதமாகும். அதாவது 3571 வாக்குகளே இக்கட்சிக்குக் கிடைத்துள்ளன.

வேறு யாருக்காவது வாக்களிப்பேன்

வேறு யாருக்காவது வாக்களிப்பேன்

நமது பட்டியலில் இல்லாத வேறு கட்சிக்கு வாக்களிப்பேன் என்ற தேர்வை ஆதரித்தோர் 5.27 சதவீதம் பேர். அதாவது 2268 வாக்குகள் இவர்களுக்குக் கிடைத்துள்ளன.

மொத்தமாக யாருக்கு??

மொத்தமாக யாருக்கு??

இது ஜஸ்ட் வாசகர்களின் மன ஓட்டம்தான்.. மக்கள் மொத்தமாக யாருக்குக் "குத்த"ப் போகிறார்கள் என்பதை தேர்தலுக்குப் பிறகுதான் தெரிந்து கொள்ள முடியும்... காத்திருப்போம்!

English summary
In Oneindia Tamil opinion poll, DMK has captured the first place and Seeman led Naam Tamilar party has emerged the 2nd biggest party. BJP is in distant 3rd place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X