நீட் விவகாரம்: சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதில் திருப்தியாக இல்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் நீட் தேர்வு பிரச்சனையை திமுகவினர் எழுப்பினர்.

அப்போது அரசு சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். அமைச்சர் விஜயபாஸ்கரின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது அரசு கவனம் செலுத்தாததால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் நீட் மசோதா உள்ளது என துரைமுருகன் குற்றம்சாட்டினார். நீட் விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Stalin Makes Fun Of Minister Sellur Raju in the assembly-Oneindia Tamil

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The DMK members walked out from assembly against Minister Vijayabaskar's reply on the Neet exam issue. They have alleged that Vijayabaskar's reply was not satisfactory.
Please Wait while comments are loading...