For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் முழுவதும் திமுகவினர் ரயில் மறியல்... பல ஊர்களில் காலையிலேயே தொடங்கியது

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று திமுகவினர் ரயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். பல ஊர்களில் காலையிலேயே ரயிலை மறிக்கத் தொடங்கி விட்டனர் திமுகவினர்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்காததைக் கண்டித்தும், தமிழக அரசின் செயலற்ற தன்மையைக் கண்டித்தும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

DMK stages rail roko all over Tamil Nadu

இன்று முற்பகல் 11 மணி அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் பல ஊர்களில் காலையிலேயே ரயில் மறியல் தொடங்கி விட்டது. அலை அலையாக வந்த திமுகவினர் ரயில்களை மறித்துப் போராட்டம் நடத்தியதால் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பைச் சந்தித்தது.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ பெரியசாமி தலைமையில் அவரது மகன் செந்தில் குமார் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர்.

திருத்தணி அருகே திருவாலங்காடு ரயில் நிலையத்தில் கோவை எக்ஸ்பிரஸ், அரக்கோணம் பாசஞ்சர் உள்பட 5 ரயில்கள மறித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

English summary
DMK staged rail roko all over Tamil Nadu in support of Jallikattu today. Since the morning, DMK cadres are stalling train transport in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X