For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மது விலக்கை அமல்படுத்தும் புதியசட்டம் பிறப்பிக்க சட்டசபையை கூட்ட வேண்டும்...ஆளுநரிடம் தி.மு.க. மனு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை அமல்படுத்தும் வகையில் சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் ஆளுநர் ரோசையாவை சந்தித்து தி.மு.க. மனு அளித்துள்ளது.

தமிழகத்தில் மது விலக்கு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டமும் தீவிரமடைந்துள்ளது.மது விலக்கு கோரி அரசியல்கட்சிகளும் களத்தில் குதித்துள்ளதால், தமிழக அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

rosaiya

மது விலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை விளக்க சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஜெ. அன்பழகன் ஆகியோர் தமிழக ஆளுநர் ரோசையாவை இன்று சந்தித்தனர்.

அப்போது மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் புதிய சட்டம் பிறப்பிக்க சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது..

டாஸ்மாக் கடைகளைஉடனடியாக மூடும்படியும் தமிழகத்தில் மதுவிலக்கைஅறிமுகப்படுத்தத் தேவையான கொள்கை முடிவை எடுக்கவும், சட்டத்தை இயற்றவும் தற்போதுள்ள அரசை ஏற்கனவே திராவிடமுன்னேற்றக் கழகம் வலியுறுத்தி உள்ளது.

31.07.2015 அன்று திரு. சசிபெருமாளை மரணத்திற்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகள் குறித்து தற்போது பதவியில் உள்ளசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்

மது எதிர்ப்பு போராட்டத்தின் போது, காயமடைந்த மாணவர்களுக்கு பிரபலமான தனியார் மருத்துவமனைகள் மூலம் உடனடியாக சிறந்த மற்றும் போதியமருத்துவ உதவியை அளிக்க மாநில நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்

மாணவர்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர்களின் எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும். எனவே, அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள குற்றங்களை கைவிடவும், அவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யவும் அரசுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்.

இந்திய அரசியல் சட்டப் பிரிவின்படி நல்ல, தூய்மையான நிர்வாகத்திற்காக மாநில அரசின் நிர்வாக விவகாரங்கள் தொடர்பான தகவல்களை கேட்டுப் பெறுவதற்கு தங்களுக்கு அதிகாரம் உள்ளது. இந்த நிலைமையில்தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேலும் சீர்குலைவதைதடுக்கும்பொருட்டு அவசரச் சட்டத்தின் மூலமாகவோ, அல்லதுவரும் சட்டமன்றக் கூட்டத்தில் தேவையான சட்டம் இயற்றுவதன் மூலமாகவோ தமிழகம் முழுவதும் மதுவிலக்கைஅமல்படுத்தவும் உடனடியாக அனைத்து டாஸ்மாக் கடைகளைமூடவும் மாநில அரசுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்.

உள்ளிட்ட 15 கோரிக்கைகள் தி.மு.க. மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், தி.மு.க.வினரின் மது ஆலைகள் மூடப்படும் என கூறினார்.

English summary
DMK Urges tamilnadu governor to convene TN assembly to implement new ordinance for liquer free
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X