ஒரு எம்எல்ஏ-வின் வாக்கு மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் ஒரு எம்எல்ஏ, ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வோம்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டின் ஜனாதிபதியை பொதுமக்கள தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக எம்எல்ஏ, எம்.பிக்களே அவரை தேர்வு செய்கின்றனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜனாதிபதி என்பவர் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார், அவருக்கான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.

முப்படைகளின் தலைவர்

முப்படைகளின் தலைவர்

ராணுவம், கடற்படை, விமான படை ஆகிய முப்படைகளின் தலைவராக இருப்பவர் நாட்டின் ஜனாதிபதியாவார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஒருவர் இந்தியாராக இருக்க வேண்டும். 35வயது நிறைவடைந்தவராகவும், எம்.பி. ஆவதற்கான தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். ஆதாயம் தரும் பதவிகளை அந்த நபர் வகிக்கக் கூடாது. அந்த நபரை குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களாவது வழிமொழிய வேண்டும்

வாக்குகளின் மதிப்பு

வாக்குகளின் மதிப்பு

பொதுதேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கு ஒரு மதிப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு கடந்த 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கீட்டின்படி வாக்குகளுக்கு மதிப்பு வழங்கப்படுகிறது.

எம்எல்ஏக்களுக்கு...

எம்எல்ஏக்களுக்கு...

மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 1000-த்தால் பெருக்கி 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகையை வகுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு எம்எல்ஏ-வின் வாக்கு மதிப்பு 176 ஆகும். இது மாநிலத்துக்கு மாநிலம் மக்கள்தொகையின் அடிப்படையில் மாறுபடும். தமிழகத்தை பொருத்தவரை மொத்த எம்எல்ஏ-க்களின் மதிப்பு 5,49,495 ஆகும்.

எம்பிக்களுக்கு...

எம்பிக்களுக்கு...

எம்பிக்களை பொருத்தவரை நியமன உறுப்பினர்கள் நீங்கலாக லோக்சபாவில் 543 எம்பி.க்களும், ராஜ்யசபாவில் 233 எம்பி.க்களும் என மொத்தம் 776 எம்பிக்கள் உள்ளனர். ஒரு எம்பியின் வாக்கு மதிப்பை கணக்கிட மொத்த எம்எல்ஏ-க்களின் வாக்கு மதிப்பை 776-ஆல் வகுக்க வேண்டும். அப்போது ஒரு எம்பியின் வாக்கு மதிப்பு 708 ஆகும். மொத்த எம்பிக்களின் வாக்கு மதிப்பு 5, 49,408. எம்எல்-க்கள், எம்பிக்களின் மதிப்பை சேர்த்தால் மொத்தம் 10,98,903 ஆகும்.

Perarivalan’s mother Arputham Ammal has thanked Tamilnadu MLAs - Oneindia Tamil
வாக்குப் பதிவு

வாக்குப் பதிவு

எம்பிக்களுக்கு பச்சை நிற வாக்குச் சீட்டுகளும், எம்எல்ஏ-க்களும் இளங்சிவப்பு நிற வாக்குச் சீட்டுகளும் வழங்கப்படும். அதில் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க விருப்பம் என்பதில் 1, 2 என எண்களை மட்டுமே குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்படும் போது எந்த எண் கொண்ட வேட்பாளரை 50 சதவீதத்தினர் தேர்வு செய்துள்ளரோ அவரே வெற்றி வெற்றவராக அறிவிக்கப்படுவர். ஒருவேளை இருவரும் சமமாக இருக்கும் பட்சத்தில் விருப்ப தேர்வு வாக்குப்பதிவு முறையில் ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவர்.

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
What is the value of vote for a MLA, MP? How President will be elected?
Please Wait while comments are loading...