For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த தேர்தலிலும் ரஜினி வாய்ஸ் வேணும் - கேட்கிறார் டாக்டர் ராமதாஸ்

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: 1996-ம் ஆண்டு தேர்தலைப் போலவே 2016-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கும் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாமக தலைமைச் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கில் நேற்று நடந்தது.

Dr Ramadass wants Rajini voice in coming election too

கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கட்சி நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்பு மணி ராமதாஸ், துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, எம்எல்ஏக்கள் ஜெ.குரு, கணேஷ் குமார், வழக்கறிஞர் பாலு உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

தமிழகத்தில் 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இப்போதும் அதே நிலைதான்.

எனவே அன்றைக்குத் தந்தது போலவே இப்போதும் அவர் குரல் கொடுக்கவேண்டும்.

பாமக கூட்டணியில் மதிமுக, காந்திய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐஜேகே, தமிழர் தேசிய முன்னணி, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 8 கட்சிகள் இணைய வேண்டும்.

ஜெயலலிதாவின் நிலைமை யைப் பார்த்து அதிமுக விழி பிதுங்கி நிற்கிறது. 2016 தேர்தல் ஒரு குருஷேத்திரம். இதில் புதிய கீதோபதேசம் எழுத ஊடகங்கள் துணை நிற்கவேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

English summary
PMK founder Dr Ramadass urged Rajinikanth to give voice for his alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X