For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாதி அரசியலை ஒரு போதும் ஆதரிக்கக் கூடாது... யாரைச் சொல்கிறார் தமிழிசை?

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழகத்தில் ஜாதி அரசியலை ஒரு போதும் ஆதரிக்க கூடாது என பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

நெல்லை வந்த தமிழிசை அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவின் பட்ஜெட் சுதந்திர இந்தியாவின் சிறந்த பட்ஜெட்டாக உளளது. ஆனால் இது குறித்து தமிழகத்தில் மடடும் அலசி ஆராயாமல் அனைத்து கட்சிகளும் எதிர் கருத்துகளை கூறியிருப்பது துருஷ்டவசமானது.

இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்பதற்கான வழிமுறைகள் பட்ஜெட்டில் உள்ளது. ஆனால் வைகோ பட்ஜெட் வெளியாவதற்கு முன்னதாக ஜோதிடம் போல் விமர்சித்து கருத்து தெரிவித்தார். மத்திய அரசின் எந்த திட்டத்தையும் விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வைகோ போன்றவர்கள் கை விட வேண்டும்.

Dr Tamilsai slams caste vote bank politics

கட்சிக்கு அதிக உறுப்பினர்களை சேர்த்த முதல் 10 மாநிலங்களில் தமிழகமும் ஓன்றாகும். ஆயிரம் உறுப்பினர்களுக்கும் அதிகமாக சேர்த்த 600 மண்டல தலைவர்களுக்கு வரும் 5ம் தேதி கோவையில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார்.

தமிழகத்தில் ஜாதி கொலைகள் அடிக்கடி நடப்பது கண்டிக்கத்க்கது. மதத்தின் பெயரால் நடக்கும் சர்சைகளை விமர்சிக்கும் அரசியல் கட்சிகள், ஜாதியின் பெயரால் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகளை கண்டுகொளவதில்லை.

ஜாதியின் பெயரால் வாக்கு வங்கிகளை உருவாக்கும் அரசியலை ஊக்குவிக்க கூடாது. ஜாதி, மததத்தின் பெயரால் உயிர்பலி நடப்பது கண்டிக்கத்தக்கது. அவ்வாறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாகும் என்று கூறினார் தமிழிசை.

ஏதோ ஒரு கட்சியை மனதில் கொண்டே ஜாதியின் பெயரால் வாக்கு வங்கிகளை உருவாக்கக் கூடாது என்று தமிழிசை கூறியுள்ளதாக சலசலப்பு எழுந்துள்ளது. தமிழக பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி என சில ஜாதிக் கட்சிகள் இடம் பெற்றிருக்கும் நிலையில் ஜாதி ரீதியிலான வாக்கு வங்கி தவறு என்று தமிழிசை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
All of a sudden TN BJP president Dr Tamilisai Soundararajan hasn slammed the caste vote bank politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X