For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மர்ம விமான விபத்தால் கிடைக்காமல் போன பெரியார் கோரிய தனி திராவிட நாடு!

இன்று திராவிட நாடு கோஷம் பலமாக எழுகிறது... 67 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த மர்ம விமான விபத்தால் திராவிட நாடு எளிதாக கிடைப்பது கிடைக்காமல் போனதும் வரலாறு.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இன்று திராவிட நாடு கோஷத்தை உச்சரிப்பவர்கள் 67 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த மர்ம விமான விபத்து ஒன்றால் தந்தை பெரியார் கோரிய திராவிட நாடு 'எளிதாக' கிடைக்காமல் போன வரலாற்றையும் அறிந்து கொள்வது அவசியம்.

1938 இந்தி எதிர்ப்பு போர் உச்சத்தை எட்டிய காலம். திருச்சியில் இருந்து மணவை ரெ. திருமலைசாமி தலைமையில் தமிழர் பெரும்படை என்ற பெயரில் சென்னைக்கு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பயணத்தின் முடிவில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு தமிழருக்கே என்ற அரசியல் முழக்கத்தை தந்தை பெரியார் முன்வைத்தார். இந்த முழக்கமே திராவிட நாடாக உருவெடுத்தது.

சர்.ஏ.டி. பன்னீர்செல்வம்

சர்.ஏ.டி. பன்னீர்செல்வம்

அப்போது நீதிக்கட்சியின் முதன்மை தலைவராக இருந்தவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம். பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். திராவிட நாடு கோரிக்கை உச்சகட்டமான நேரத்தில் 2-வது உலகப் போர் தொடங்குகிறது. அப்போது அமைக்கப்பட்ட போர்க்கால அமைச்சரவையில் இந்திய விவகாரங்களுக்கான அமைச்சரின் செயலராக சர் ஏ.டி. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டிருந்தார். இந்தியர் ஒருவருக்கு இப்பதவி வழங்கப்பட்டதும் அதுதான் முதல் முறை. முன்னர் 1930-ம் ஆண்டு வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் சர் ஏ.டி. பன்னீர்செல்வம்.

உற்சாகத்தில் நீதிக்கட்சி

உற்சாகத்தில் நீதிக்கட்சி

அவரது ஆற்றலைப் பார்த்துதான் அன்றைய இங்கிலாந்து அரசு பதவி கொடுத்தது. சர் ஏ.டி. பன்னீர்செல்வம் லண்டன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் திராவிட நாட்டை வாங்கிவிடலாம் என உற்சாகத்தில் இருந்தனர் நீதிக்கட்சி தலைவர்கள். சர் ஏ.டி. பன்னீர்செல்வம் புறப்படும் நாளும் வந்தது. அப்போது அவரை உற்சாகத்துடன் நீதிக்கட்சி தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர்.

கராச்சி டூ லண்டன்

கராச்சி டூ லண்டன்

1940-ம் ஆண்டு மார்ச் மாதம் கராச்சியில் இருந்து சர் ஏ.டி. பன்னீர்செல்வம் விமானத்தில் புறப்பட்டார். மொத்தம் 8 பேர் அந்த விமானத்தில் இருந்தனர்.

திடீர் மாயம்

திடீர் மாயம்

6 மணிநேர பயணம்.... ஓமன் வளைகுடா பகுதியை தாண்டிய அந்த விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில் மாயமானது. அந்த விமானம் என்ன ஆனது என்பதற்கு 67 ஆண்டுகளாகியும் விடை கிடைக்கவில்லை.

துடிதுடித்த பெரியார்

துடிதுடித்த பெரியார்

அன்று ஏ.டி. பன்னீர்செல்வம் மட்டும் லண்டன் சென்று பணியில் சேர்ந்திருந்தால் திராவிட நாடு கிடைத்திருக்கும்... ஏ.டி. பன்னீர்செல்வம் இறந்துவிட்டதாக இங்கிலாந்து அரசு அறிவித்தபோது தந்தை பெரியார் துடிதுடித்துப் போனார்.

பெரியார் இரங்கல்

பெரியார் இரங்கல்

அப்போது பெரியார் எழுதிய இரங்கல் வரலாற்று சிறப்புமிக்க ஒன்று. அந்த இரங்கலில், என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை; ஒரு பொட்டு கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்தபோதும் இயற்கை தானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா, இது பேராசை அல்லவா என்று கருதினேன். 10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன் படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20 வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை; சிதறவில்லை. பன்னீர்செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. தமிழர்களைக் காணுந்தோறும் காணுந்தோறும் தமிழர் நிலையை எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கின்றது.

தமிழரை நினைத்து நினைத்து..

தமிழரை நினைத்து நினைத்து..

காரணம் முன் சொல்லப்பட்ட மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவு என் தனிப்பட்ட சுக துக்கத்தைப் பொறுத்தது; தன்னலம் மறையும்போது அவர்களின் மறைவின் நினைவும் மறந்துபோகும். பன்னீர்செல்வத்தின் மறைவு பொது நலத்தைப் பொறுத்தது; தமிழர்களின் நிலையைப் பொறுத்தது. எனவே, தமிழர்களைக் காணுந்தோறும், நினைக்குந்தோறும் பன்னீர்செல்வம் ஞாபகத்திற்கு வருகிறார். இது என்று மறைவது, இவருக்கு பதில் யார் என்றே திகைக்கிறது... காலம் சென்ற பன்னீர் செல்வமே! காலம் சென்று விட்டாயா? நிஜமாகவா? கனவா? - தமிழர் சாந்தி பெறுவாராக! என முடித்திருப்பார் பெரியார். அதன் பின்னரும் தந்தை பெரியார் வாழ்நாள் முடியும் வரை தனித் தமிழ்நாடு கோரிக்கையில் உறுதியாக இருந்தார். குறிப்பாக மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை தீவிரமாக முழங்கியவர் தந்தை பெரியார்.

அதேகாலகட்டத்தில் பெரியாரிடம் இருந்து விலகி திமுகவை உருவாக்கிய அண்ணாதான், இப்போது சொல்வதைப் போல தென்னிந்திய மாநிலங்களை இணைத்து நில அடிப்படையில் திராவிட நாடு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பின்னர் அந்த கோரிக்கையை திமுக கைவிட்டு மாநில சுயாட்சி முழக்கத்தை கையில் எடுத்தது.

காலங்கள் உருண்டோடிய நிலையிலும் கூட திராவிட நாடு கோஷங்கள் காலச்சக்கரம் போல மீண்டும் சுழன்றுதான் வந்துள்ளது.

English summary
Now Netizens Demanding Dravidanadu. But 67 years before Periyar EVR's Justice Party launched Dravidanadu Movement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X