For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எர்த் அவர்: சனிக்கிழமை இரவு 1 மணிநேரம் பவருக்கு 'ரெஸ்ட்' கொடுங்க

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வரும் சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை எர்த் அவர் கடைபிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மின்சாரத்தை அணைத்து வைப்பது தான் எர்த் அவர். கடந்த 2007ம் ஆண்டு எர்த் அவர் பிரச்சாரத்தை உலக இயற்கை நிதியம் துவங்கி வைத்தது. உலகில் உள்ள 7 ஆயிரம் நகரங்களில் இந்த எர்த் அவர் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை எர்த் அவர் கடைபிடிக்கப்படுகிறது.

Earth hour on March 28th

இந்த ஆண்டுக்கான எர்த் அவர் வரும் சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து எர்த் அவர் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ஒரு மணிநேரம் மின்சாரத்தை அணைத்து வைப்பதால் என்ன நடக்கப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். தேவைப்படும் போது மட்டும் மின்சாரத்தை பயன்படுத்துங்கள், மின்சாரத்தை வீணடிக்காமல் இருக்க வலியுறுத்தி தான் இந்த எர்த் அவர் கடைபிடிக்கப்படுகிறது. பூமியை காக்கும் நோக்கத்துடன் எர்த் அவர் பிரச்சாரம் துவங்கப்பட்டது.

வரும் சனிக்கிழமை நடக்கும் எர்த் அவர் பிரச்சாரத்தில் நீங்களும் பங்கேற்று, உங்களுக்கு தெரிந்தவர்களையும் பங்கேற்குமாறு வலியுறுத்தலாமே.

English summary
Earth hour will be observed on march 28th from 8.30 pm till 9.30 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X