For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் 5 புதிய மேம்பாலங்கள்: எடப்பாடி பழனிச்சாமி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 5 புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை துறை மானியக் கோரிக்கை மீது சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: ரூ.214 கோடி செலவில் மியாட் மருத்துவமனை முதல் ராமாபுரம் வழியாக முகலிவாக்கம் வரை பல்லடுக்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும். ரூ.1 கோடி மதிப்பில் மவுண்ட் - பூவிருந்தவல்லி ஆவடி மார்க்கத்தில் பல்லடுக்கு மேம்பாலம் கட்டப்படும்.

Edappadi K Palaniswami announced 5 new bridges for chennai

குன்றத்தூர், மடிப்பாக்கம், மாடம்பாக்கம் கொரட்டூரில் ஆகிய 4 சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைக்கப்படும். வழபழனி முதல் அசோக் பில்லர் வரையில் ரூ.380 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் கட்டப்படும். தாம்பரம் கிழக்கு புறவழிசாலை அமைக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.

ஒரகடம் வாலஜாபாத் சாலையை ஆறு வழி சாலையாக மாற்றுவதற்கு ரூ.185 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.ஒரகடம் வாலஜாபாத் சாலையை ஆறு வழி சாலையாக மாற்றுவதற்கு ரூ.185 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்டச்சாலை பணி இந்த ஆண்டே முடித்து பயன்பாட்டுக்கு வரும். மேலும் 6 வழி வெளிவட்டச் சாலை இந்த ஆண்டே மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மதுரை, கோவை மாவட்டங்களில் 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும். பொள்ளாச்சி, கோபிசெட்டிப்பாளையம், துறையூர் உள்ளிட்ட இடங்களில் புறவழிச் சாலை அமைக்கப்படும். ரூ.1000 கோடியில் 10 இடங்களில் அணைகள் கட்ட திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை வண்டியூர் கண்மாய் ரூ.3.50 கோடியில் புனரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Tamilnadu chief minister Edappadi K Palaniswami today has announced 5 new bridges for chennai due to heavy traffic
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X