ஊட்டி மலர்க் கண்காட்சி... உற்சாகமாக பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற 121ஆவது மலர்கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் எஸ்.பி வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.

வருடம் தோறும் கோடையில் ஊட்டியில் மலர் கண்காட்சி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும். அதில் பல்வேறு வகையைச் சேர்ந்த பூக்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். ரோஜா மலரில் மட்டும் பல வகையைச் சேர்ந்த ரோஜா செடிகள் பூக்களுடன் வக்கப்படும். அது பார்ப்பவர்களின் கண்களையும் மனதையும் பறிக்கும்.

Edappadi Palanisamy  opens  flower exhibition in Ooty

கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காகவும் இந்த விழா நடைபெறுகிறது. இன்று ஊட்டியில் நடைபெற்ற 121ஆவது மலர் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

முதல்வருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, எஸ்.பி வேலுமணி ஆகியோரும் உடன் சென்றனர். நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கரும் இந்த விழாவில் கலந்துகொண்டார். ஒரு வார காலத்துக்கு இந்த கண்காட்சி நடைபெறும். திரளான சுற்றுப்பயணிகள் இந்த மலர்க் கண்காட்சியை ஆவலுடன் சென்று பார்த்து வருகின்றனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
TN Chief minister Edappadi Palanisamy participated in open ceremony of 121th flower exhibition in Ooty botanical park. Ministers Sellur Raju and S.P Velumani associated with CM.
Please Wait while comments are loading...