For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"நம்பர்ஸ் எனிபடி ஏடிஎம்கே.." ஆங்கிலத்தில் அசத்திய கல்வி அமைச்சர் செங்கோட்டையன்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பள்ளி கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள செங்கோட்டையன், ஆங்கிலத்தில் ரெண்டு வரி கூட பேச முடியாமல் திணறி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

இன்னும் உங்களிடம் போதிய அளவுக்கு எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்கள் பலம் உள்ளதா? என்று பெண் நிருபர் கேள்வி எழுப்பினார்.

Education minister KA Sengottaiyan couldn't speak to English TV channel

அதற்கு பள்ளி கல்வித் துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்ற, செங்கோட்டையன் ஆங்கிலத்தில் அளித்த பதில்: "நம்பர்ஸ் எனிபடி ஏடிஎம்கே, பியூப்பிள்ஸ் மேடம் சப்போர்ட்டிங்" என்றார். இவ்வாறு செங்கோட்டையன் சொன்ன பதிலின் அர்த்தம் உங்களில் யாருக்காவது புரிகிறதா?

இதன்பிறகு நிருபர் கேட்ட கேள்விக்கு வாயை மூடிக்கொண்டு நைசாக ஓட்டம் பிடித்தாரே பார்க்கலாம் செங்கோட்டையன். ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன், ஓ.பி.எஸ் பக்கம் போனதால் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

பாண்டியராஜனை பொறுத்தளவில் அறிவு சார் அமைச்சராக பார்க்கப்பட்டார். ஜி.எஸ்.டி வரி விதிப்பு பிரச்சினைகளில் வலுவான வாதங்களை முன் வைத்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தவர் அவர். ஆனால் துரதிருஷ்ட சூழல் காரணமாக, இப்போது நல்ல ஒரு கல்வி அமைச்சரை தமிழகம் இழந்துவிட்டது என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

English summary
Education minister KA Sengottaiyan couldn't speak to English TV channel as he hasn't has enough education.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X