For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினகரன் உருவபொம்மை எரிப்பு... போட்டிக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ், வைத்திலிங்கம் உருவபொம்மை எரிப்பு!

புதுச்சேரியில் தினகரன் உருவபொம்மை எரிக்கப்பட்டதற்கு பதிலடியாக முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

புதுச்சேரி : புதுவை தி விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் காலையில் தினகரன் உருவபொம்மை எரிக்கப்பட்டதையடுத்து மாலையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜ்யசபா எம்பி வைத்திலிங்கம் உள்ளிட்டோரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் புதுச்சேரி சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தி விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வெளியே வர வேண்டும் என்று வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு புதுச்சேரி அதிமுகவின் ஓம்சக்தி சேகர் இன்று காலையில் ரிசார்ட்டுக்குள் செல்ல முயற்சித்தார்.

 Effigy of EPS, OPS burnt in front of The Wind Flower resort

ஆனால் போலீசார் ஓம்சக்தி சேகர் உள்ளிட்ட பேரணியாக வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். இந்த போராட்டத்தின் அங்கமாக தினகரனின் உருவபொம்மையை எரித்து அதிமுகவின் ஒரு பிரிவினர் போராடினர்.

இந்நிலையில் மாலையில் புதுச்சேரி சட்டசபை உறுப்பினர் அன்பழகன் தலைமையிலான அதிமுகவினர் (இவர்கள் சசிகலா தரப்பு ஆதரவாளர்கள்) ரிசார்ட் முன்பு முதல்வர் பழனிசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராஜ்யசபா எம்.பி வைத்திலிங்கம் உள்ளிட்டோரின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஜாலியாக ரெஸ்ட் எடுக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசு விடுதி அதிமுகவினரின் அக்கப்போருகளால் போராட்டக் களமாகியுள்ளது. அதோடு ரிசார்ட் வாசலில் அவ்வபோது உருவபொம்மை எரிப்பு சம்பவங்களும் நடத்தப்படுவதால் பரபரப்பு ஏற்படுகிறது, இதனால் அங்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

English summary
Effigies of OPS, EPS, and Vaithilingam burnt in front of the wind flower resort which were 19 Dinakaran supporting MLAs were halted. to give a revenge of burnt effigy of Dinakaran in the morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X