For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணம் கொடுத்து செய்தி போட்ட அமைச்சர் தகுதி நீக்கம்.. தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை!

பணம் கொடுத்து செய்தி போட்ட மத்தியப் பிரதேச அமைச்சரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பணம் கொடுத்து செய்தி போட்ட மத்தியப் பிரதேச அமைச்சரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளது. மேலும் அவர் தேர்தலில் போட்டியிடவும் தேர்தல் ஆணையம் 3 ஆண்டுகள் தடையும் விதித்துள்ளது.

சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான மத்தியப்பிரதேச அரசில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருப்பவர் நரோட்டம் மிஸ்ரா. இவர் கடந்த 2008ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முறையான செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்டது மற்றும் ஊடகங்களில் பணம் கொடுத்து செய்தி வெளியிட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.

Election Commission banned on senior Madhya Pradesh minister Narottam Mishra from contesting elections for 3 years

இவர் கடந்த 2008ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது செலவுக் கணக்கு குறித்த சில தகவல்களை மிஸ்ரா அளிக்கவில்லை என்று கடந்த 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பார்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

தகுதி நீக்கம்

இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 7 (பி) அடிப்படையில் பணம் கொடுத்து செய்தி வெளியிட்டதற்காக மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு போட்டியிட தடை

இதனால், அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அவரால் போட்டி போட முடியாது.

தவியிலும் தொடர முடியாது.

தேர்தல் ஆணைய உத்தரவின் காரணமாக அவரால் அமைச்சர் பதவியிலும் தொடர முடியாது.
இதனிடையே தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார்.

தனக்கு நீதி கிடைக்கும்

தான் எந்த ஊழலும் செய்யவில்லை என்றும் தான் எந்த மீடியாவுக்கும் பணம் கொடுக்கவில்லை என்றும் எந்த மீடியாவும் தன்னிடம் இருந்து பணம் பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தனக்கு நீதி கிடைக்கும் என தான் நம்புவதாகவும் நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார்.

English summary
The Election Commission banned on Saturday senior Madhya Pradesh minister Narottam Mishra from contesting elections for three years for allegedly using paid news to fan his assembly election campaign in 2008.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X