For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்காளர்களே உங்க போன் நம்பரை மறந்தாலும் பரவாயில்லை... 1950ஐ மறந்துடாதீங்க!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் மக்களுக்காக பல சேவைகளை புகுத்தி வருகிறது தேர்தல் ஆணையம். அந்த வகையில் புதிய எஸ்எம்எஸ் சேவையை அது அறிமுகப்படுத்தியுள்ளது.

1950.. இதுதான் வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள எண். இந்த எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் வாக்காளர் கூறும் வாக்குச் சாவடியில் எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் வாக்களிக்கச் செல்லலாம்.

Election commission introduce new SMS service

தமிழகத்தில் மே 16ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். இடைவிடாமல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

தற்போது தமிழகத்தில் கடும் வெயில் அடித்து வருவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மதியத்தில் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த எஸ்எம்எஸ் சேவை வாக்காளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

English summary
The Election commission have introduced new SMS service for voters to know the status of polling booth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X