For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓட்டுக்கு நோட்டு... ரஜினி பஞ்ச் வசனத்தில் கலக்கும் தேர்தல் ஆணையம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சட்டசபை தேர்தலில் தேர்தலில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் ஒரு பக்கம் அனல் பறக்க தேர்தல் ஆணையம் செய்யும் பிரச்சரம் சற்று அதிகமாகவேதான் இருக்கிறது.

100 சதவீத வாக்குப்பதிவிற்காகவும், மக்கள் பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடக்கூடாது என்பதற்காகவும் தேர்தல் கமிஷன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்பதனை வலியுறுத்தியும் தேர்தல் ஆணையம் பல வாசகங்களை வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதற்கு எதிராக பல கருத்துக்களையும், பஞ்ச் வசனங்களையும் பதிவிட்டுள்ளது. திரைப்படங்களின் பெயர்கள், ரஜினியின் பஞ்ச் வசனங்களையும் உல்டா செய்து டுவிட் போட்டு வருகிறது தமிழக தேர்தல் ஆணையம். நல்ல பஞ்ச் மீம்ஸ் எழுதிய வாக்காளர்களுக்கு பரிசும் கொடுக்கிறது தேர்தல் ஆணையம்.

இது பாட்ஷா பஞ்ச்

ரஜினி, பாட்ஷா திரைப்படத்தில் 'நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி' என்பார். அந்த வசனத்தை, 'ஒரு தடவ நீங்க வாங்குனா, அஞ்சு வருஷத்துக்கு ஏமாந்த மாதிரி' என்று மாற்றப்பட்டுள்ளது.

போக்கிரி பஞ்ச்

விஜய் நடித்த போக்கிரி படத்தில் இருந்து நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன் என்ற டயலாக்கை இப்படி மாற்றியுள்ளது தேர்தல் ஆணையம்.

வாழ்க்கையில் ரணம்

வாக்கு போட பணம் வாங்குவது வாழ்க்கையில் ரணத்தை ஏற்படுத்தும் என்கிறது இந்த பஞ்ச்

ஓட்டுக்கு நோட்டு

தேர்தலில் ஓட்டு போட நோட்டு வாங்குவது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்கிறது இந்த பஞ்ச்.

ரஜினி பஞ்ச்

ரஜினி நடித்து வெளிவந்த 'முத்து' திரைப்படத்தில், 'நான் எப்ப வருவேன், எப்படி வருவேனு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்' என்று ஸ்டைலாக பேசுவார். அந்த வசனத்தை தேர்தல் கமிஷன், பணத்தை உங்களுக்கு 'எப்ப தருவாங்க, எப்படி தருவாங்கனு யாருக்கும் தெரியாது? ஆனா தரும்போது வாங்காதீங்க!' என்று மாற்றி அமைத்திருக்கிறது.

ஹீரோவா? ஜீரோவா?

ஓட்டு போட்டு ஹீரோ ஆகப்போறீங்களா? இல்லை ஜீரோ ஆகப்போறீங்களா என்று கேட்கிறார் இவர்.
இந்த பஞ்ச் வசனங்கள் இளம் தலைமுறை வாசகர்களை ஈர்க்கிறது என்னவோ உண்மைதான்.

English summary
In the run-up to the assembly elections, the most colourful campaign is being run not by any political party but by the Election Commission. Inspired by popular Kollywood film names, the commission has introduced several catchy memes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X