For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதுமலை புத்துணர்வு முகாமுக்குச் செல்ல தயாராகும் தூத்துக்குடி கோவில் யானைகள்

Google Oneindia Tamil News

நெல்லை: முதுமலையில் நடைபெற உள்ள கோவில் யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கோவில்களில் இருந்து 10 யானைகள் தயாராகி வருகின்றன.

தமிழகத்திலுள்ள கோவில் யானைகளுக்கு மதம் பிடிக்காமல் இருக்க அவைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் நலவாழ்வு முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முகாம் டிசம்பர் மாதம் முதுமலையில் உள்ள புலிகள் சராணாலய தெப்பக்காட்டில் தொடங்குவது வழக்கம்.

Elephants ready to Muthumalai camp…

இதனையடுத்து மாநிலம் முழுவதும் கோவில்களில் உள்ள யானைகள் அந்த முகாமில் பங்கேற்ற அனுப்பிவைக்கப்படுகின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்ட யானைகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து ஒரு ஆண் யானை உள்பட மொத்தம் 10 யானைகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து புறப்பட்டு செல்வதுண்டு.

இந்தாண்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் உள்ள குமரன் என்ற ஆண் யானை, சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் பெண் யானைகோமதி, டவுன் நெல்லையப்பர் கோவில் பெண் யானை காந்திமதி, இலஞ்சி திருவிலஞ்சி குமாரர் கோவில் பெண் யானை வள்ளி, ஆழ்வார்திருநகரி ஆதி நாத ஆழ்வார் கோவில் பெண் யானை ஆதிநாயகி, திருக்கோளூர் வைத்தியமாநிதி பெருமாள் கோவில் பெண் யானை குமுதவல்லி, இரட்டை திருப்பதி அரவிந்தலோசன் கோவில் பெண் யானை லட்சுமி, திருக்குருங்குடி அழகிய நம்பி கோவில் பெண் யானைகள் குருங்குடி வள்ளி, சுந்தரவள்ளி உள்ளிட்ட 10 யானைகளும் புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டு செல்ல தயாராகிவருகின்றன.

அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன.மூலிகை உணவுகள் இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து கொண்டு வரப்படும் கோவில் யானைகளுக்கு அங்கு தேவையான இயற்கை உணவுகள் அளிக்கப்படும். மூலிகை உணவுகள். ஆரோக்கியத்திற்கான குளியல் மற்றும் விளையாட்டு பயிற்சிகள் மூலம் இம்முகாமில் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கப்பட உள்ளது.

English summary
Muthumalai elephant camp starts soon. So the 10 elephants from Tuticorin district starts to muthumalai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X